கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிலியில் பயங்கர நில நடுக்கம்; சுனாமி அறிவிப்பு


அமெரிக்க � சிலியின் கிழக்கு பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதியின் கடற்கரைகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, மத்திய அமெரிக்கா மற்றும் பசுபிக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 78 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment