ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி மரணம் : சியம்பலாகொடையில் சம்பவம்
சியம்பலாகொடை கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஹேன தோட்டத்தில் ஒன்பது வயதுச் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீக்காயங்களுடன் இன்று செவ்வாய்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.குமாரகே தசநாயக்க (வயது 45), சஹன் திசந்த (வயது 9), குமாரகே செவ்வந்தி (வயது 19) குமாரகே மதுஷானி (வயது 15) ஆகிய தந்தை உட்பட மூன்று மகள்மாரும் மகனுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.மத வேறுபாடுகளினால் தாயுடன் வாக்குவாதப்பட்ட தந்தை, தமது குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த வேளை, அவர்கள் மீது பெற்றோலைக் கொட்டியுள்ளார். அதன் பின்னர் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்து கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான மனைவி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment