ஜெனரல் சரத் பொன்சேகா கைது (3ம் இணைப்பு)
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து திங்களன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் திடிரென சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இராணுவ பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரத்பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச்சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே திங்களன்று போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு உயர் மட்டக்குழு ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும், இது தொடர்பில் எனக்கு தெரிந்த உண்மைகளை நான் வெளியிட வுள்ளேன் என சரத்பொன்சேகா கூறியிருந்தார்.
அத்தோடு தன்னை துரோகி எனக்கூறுவதையும் அவர் கண்டித்ததுடன் உண்மையை சொல்பவர் துரோகி அல்ல என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் கைது செய்யப்படுவார் என எமது தளம் உட்பட பல இணைய மற்றும் செய்தி தளங்கள் ஏற்கனவே கூறியிருந்தன. இந்த நிலையில் இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவ சட்டங்களுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் துணையுடன் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்கட்சிகள் சில நாட்களாக கூறி வந்திருந்தன. எனினும் மகிந்தவின் அன்புத்தம்பி கோதாபே ராஜபக்ஷ சரத் பொன்சேகா கைது செய்யப்பட மாட்டார் என கூறிய சூடு ஆறுமுன்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக சும்மா இருந்த சரத்பொன்சேகாவை வம்புக்கு இழுத்து, பிறகு அதனால் பெரும் துன்பப்பட்டார் மகிந்த. இலகுவாக வெல்ல வேண்டிய ஜனாதிபதி தேர்தலில் , பெரும் தில்லு முல்லுகளை செய்து ஒருவாறு வெற்றி பெற நேர்ந்தது. பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், சரத்பொன்சேகா மீது மக்கள் அபிமானம் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த கைது மேலும் சிக்கலை மகிந்தவிற்கு ஏற்படுத்த கூடும்.
................
முன்னாள் இரானுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத்பொன்சேகாவை,சற்று முன் இரானுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல் கிடைத்தவுடன் அறிய தருகிறோம்
.........
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரச்பொன், இலங்கை அதிபர் சேகாராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது சரத்பொன்சேகா தரக்குறைவாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டார் பொன்சேகா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ராணுவத்தினரால் தர தரவென இழுத்து செல்லப்பட்ட பொன்சேகாவை ரகசிய இடத்தில் வைத்து ராணுவ போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment