வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுடப்பட்டது ஏன்? - கோத்தபாய கூறும் விளக்கம்!
'வி.புலிகளை சரணடையுமாறு உத்தரவிட்டதன் மூலம், சிறீலங்கா அரசு அவர்களை பாதுகாக்க முயல்வதாக முன்னர் கூறியவர் சரத் பொன்சேகவே' என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் புலனாய்வு பத்திரிகையான தெஹெல்காவுக்கு வழங்கிய செவ்வியில்யே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உச்சகட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த மே 18 ம் திகதி நடந்தது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கோத்தபாய
'மிகச்சிறிய பகுதிக்குள் விடுதலைப்புலிகள் எம்மிடம் அகப்பட்டுக்கொண்டனர். இவர்களில் 200 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். நள்ளிரவுக்கு பின்னரே இது இடம்பெற்றது. அடந்த காடுகளுக்குள், கடும் இருட்டில் இருந்து கொண்டு சில வி.புலிகள் பதில் தாக்குதல்களை மேற்கொள்ள, ஒரு பக்கமாக பிரபாகரன் சுற்றிவளைப்பினை உடைத்துக்கொண்டு தப்ப முயன்றார். அவரின் மகன் வேறு திசையில் சென்றார். சரணடைந்த 10 ஆயிரம் உறுப்பினர்கள் வேறு திசையில் இருந்து வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில், இளம் இராணுவ வீரர் ஒருவரால், வி.புலிகளின் மூத்த உறுப்பினர்களை இணங்கண்டு அவரை சுட்டுக்கொல்லும், அல்லது உயிருடன் விடும் முடிவை எவ்வாறூ எடுக்க முடியும்?
என பதில் அளித்துள்ளார்.
மேலும், தடுப்பு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது சொந்த நிலங்களுக்கு மீள் குடியமர்த்த அரசு எப்போதோ தயாராக இருந்ததாகவும், சரத் பொன்சேகாதான் தடுப்பு முகாம் மக்களினை மீள் குடியமர்த்துவதற்கு அனுமதிக்கவில்லை என்வும், அவ்வாறு மீள்குடியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் இழுத்து வந்து முகாம்களில் அடைத்த்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment