கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிப்பு

நடைபெற்று முடிந்த சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல்களை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார். எரிந்த நிலையில் பெருமளவான பயன்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் அங்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 60 வீதத்திற்கும் மேலானவை பொன்சேகாவுக்கு ஆரவாக புள்ளடியிடப்பட்டவை. அவை தேர்தல் அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டு, கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு ஆதரவான வாக்கு அட்டைகளை செல்லுபடியற்றவை என நிராகரித்துள்ள தேர்தல் அதிகாரிகள், அவற்றை 65 அட்டைகள் கொண்ட கட்டுக்களாக அகற்றியுள்ளனர். பொதுவாக ஒரு தொகுதியில் 50 அட்டைகள் கட்டப்படுவதுண்டு. எனவே 65 வாக்காளர் அட்டைகளை 50 ஆக அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இந்த ஆதரங்களை சமர்ப்பிப்பதற்காக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கொரல, பிரதி தலைவர் கரு ஜெயசூரியா உட்பட பல உறுப்பினர்கள் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர ஆகிய பீடங்களை சேர்ந்த பிரதம மதகுருக்களை சந்திப்பதற்கு சென்றுள்ளனர்.
எனினும் தமக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தள்ள தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் அட்டைகளை ஆறு மாதங்களுக்கு முன்னர் அழிப்பது குற்றமாகும் என தெரிவித்துள்ளனர்.
சிறீலங்காவில் நடைபெற்ற மிகப்பெரும் தேர்தல் மோசடிகள் தொடர்பில் கிடைத்துள்ள இந்த ஆதாரங்களை வெளிநாட்டு தூதுவர்களுக்கு காண்பிக்கப்போதவாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment