கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ளையை வரைந்த ஒவியர்கள் - சில புரிதல்களின் குறிப்புகள்



தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் நாம் பல வழிகளிலும் தகவல்களை அறிந்துள்ளோம்.

இன்னும் அறிந்தும் வருகிறோம். முஸ்லிம்களின் உறுதியான நிலைப்பாடு, பௌத்த இனவாதிகளின் தொடர் அழுத்தங்கள், பிரதமரின் துரோகம், ஜனாதிபதியின் தடுமாற்றம் என தம்புள்ளை மஸ்ஜித்  விவகாரம் தள்ளாடுகிறது. ஐ.பி.எல். கிரிக்கட் முடிவுகள் போல எதுவும் நடக்கலாம்.

 இறுதியில்...
மேற்படி நிகழ்வில் இருந்து இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு விடயங்கள் பிரதானமாக வெளிகொணரப்பட்டுள்ளன. அதே போன்று அரசிற்கும் சிங்கள இனவாத அமைப்புகளிற்கும் ஒரு  ஒரு விடயம் தெளிவாக புரிந்துள்ளது. முதலில் முஸ்லிம்கள் தொடர்பான இரு விடயங்கள் யாதென
 பார்ப்போம்.

1) தம்புள்ளை விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தியதில் முஸ்லிம்களின் தொடர் ஊடகங்களின் வலிமையும் அதன் வளற்ச்சிப்போக்கும்.

 2) இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தளத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் அவசியம்.

முன்னைய விடயம் தொடர்பாக நாம் பூரிப்பும், திருப்தியும் அடையும் வேளை, பின்னைய விடயம்  தொடர்பாக நாம் கவலை கொள்ளவேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்களிற்கான தலைமைத்துவம், அதை உருவாக்குவதற்கான தளம், அதற்கான பொறி முறை போன்றன இங்கே எழுந்து நி்ற்கும் பிரதான கேள்விகளாகும்.

சிங்கள பொளத்த இனவாதிகள் பற்றி நாம் கடுமையான சொற்பதங்களை பிரயோகிப்பதனாலோ, எழுதுவதனாலோ பிரச்சனை தீர்ந்து விடப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல் பௌத்த மயப்படுத்தபட்டுள்ளது. இந்த நாட்டின் பௌத்த மதம் ஆயுத மயப்படுத்தப்பட்டுள்ளது.

 இன்னொரு சிறுபான்மையை அடக்க, ஒடுக்க, நசுக்க இந்த இரண்டு விடயங்களும் நடைபெறல் வேண்டும். அவையிரண்டும் துர்அதிஷ்டவசமாக இலங்கையில் நடந்து முடிந்துள்ளன. வெற்றிகரமான இனசங்காரத்திற்கான அனைத்து தயாரிப்புகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இனவாத சக்திகள் அரசின் கண்அசைவிற்கு காத்து கிடக்கின்றன. இதுவே இன்றைய இலங்கையின் யதார்த்தங்கள்.

ஓர் அரசியல் கட்சியின் துரோகம்தம்புள்ளை விவகாரத்திற்கு பின்புலத்தில் சில நிகழ்வுகள் மறைந்துள்ளன. நாம் பார்த்த சுமங்கள ஹாமத்துருவிற்கு பின்னால் இந்த நாட்டின் ஒரு அரசியல் கட்சி தன் கரங்களை நீட்டியுள்ளது.

 ஜெனீவா  நிகழ்வுகளின் விளைவில் வந்த சில விடயங்கள், முஸ்லிம்களை இந்த நாட்டின் நன்றியுள்ள மக்கள் என சிங்கள மக்கள் ஒப்புகொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது. அரசும் முஸ்லிம்களை புகழ்ந்து அவர்களுடன்  நெகிழ்வான ஒரு போக்கை கடைபிடிக்க முற்பட்டது. இதன் விளைவாக முஸ்லிம்கள் ஆளும் அரச தரப்பின் பக்கம் மொத்தமாக சாய்ந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக, முஸ்லிம்கள் அரசை வெறுக்கும்  நிலைக்கு தள்ளப்படல் வேண்டும் என்ற திட்டத்தின் மறு வடிவமே தம்புள்ள விவகாரம்.

 தங்களிற்குள் பல கோஷ்டி சண்டைகள், உட்பூசல்கள் காரணமாக தமது இருப்பை தக்க வைக்க முடியாத அந்த அரசியல்  கட்சியிடம் எஞ்சியிருந்தது உறுதியான காலம் காலமாக வாக்களிக்கும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியே.
அதையும் இழக்க அவர்கள் தயாரில்லை. தம்புள்ளைக்கு தங்கள் கட்சிசார் காலி பிரதேச முஸ்லிம் விரோத அங்கத்தவர்களை ஒன்று திரட்டியே மேற்படி நிகழ்வை செய்து முடித்தனர்.

முஜிபுர் ரஹ்மான்
மேல்மாகான சபை முஜிபுர் ரஹ்மான் நாம் அறிந்த நபர். போராட்டகாரர். கொழும்பு முஸ்லிம் அரசியலில்  தவிர்க்க முடியாத சக்தி. சகதி என்றும் சிலர் சொல்வார்கள். வெள்ளிக்கிழமை தம்புள்ளை மஸ்ஜித் ஆக்கிரமிப்பு விவகாரம் நடைபெற்று முடிந்த மறு நிமிடமே ஸ்ரீ கொத்தாவில் வைத்து இவரால் ஒரு ஊடகவியளாலர் சந்திப்பு நடாத்தப்பட்டது.

 அதில் தம்புள்ளை விவகாரம் பற்றி காரசாரமாக அரசை சாடிய ரஹ்மான் ஜெனீவாவிற்கான பிரதிபலன் இதுவா என கேள்வி எழுப்பினார். அரசு முஸ்லிம்களிற்கு துரோகம் செய்துள்ளது என அழுத்தமாக கூறினார். சம்பவம் நடந்த அரை மணித்தியாளங்களுல் சம்பவம் தொடர்பாக முழு அறிக்கை வாசித்ததன் உட்புலம் பல கேள்விகளை எழுப்புகிறது இங்கே.

ஜம்மியத்துல் உலமாவிற்குள் புகுந்த இளைஞர் கோஷ்டி
 அங்கே தம்புள்ளையில் இனவாதிகளின் அட்டகாசம். இங்கே முஜிபுர் ரஹ்மானின் தம்புள்ளை முழக்கம்.  இவையிரண்டிற்கும் இடையில் இரண்டு ஆட்டோக்களில் வந்த இளைஞர்கள் “ரிஸ்வி முப்தியை” தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜம்மியதுல் உலமா சபை இதை கப்சிப் என்று மறைத்து விட்டது. ஆனால்  இந்த இளைஞர்கள் வழைத்தோட்டத்தில் ஒரு இடத்தில் அணி திரண்டு புறப்பட்டு வந்து ஜம்மியதுல் உலமா சபையிடம் ஜெனீவா விவகாரம் தொடர்பாக பிரஸ்தாபித்து இதற்கு முடிவு வேண்டும் என எச்சரித்து  சென்றனர்.

சொற்ப நிமிட இடைவெளியில், ஏன் பல முஸ்லிம் ஊடகங்களிற்கே தகவல்கள் சரியாக கி்டைக்காத கால இடைவெளியில் இவர்களிற்கு எவ்வாறு துல்லியமாக தகவல்கள் கிடைத்தன? ஜெனீவா விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி, தம்புள்ளை விவகாரத்திற்கான தீர்வையும் எப்படி சொல்ல முடிந்தது..?

 இவர்கள் தான் மீண்டும் தெவட்டகஹா மஸ்ஜித்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி முடித்தனர். இவர்களின் முஸ்லிம்கள் தொடர்பான  உண்ர்வினை மஸ்ஜித் ஆக்கிரமிப்பு தொடர்பான கவலையினை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு  உணற்சிபூர்வமான முஸ்லிமாக செயற்பட்டுள்ளனர். அது பெரிதும் வரவேற்கதக்கதே. ஆனால் இதற்கு பின்னால்  இவர்களை இயக்கும்  இன்னொரு பேரினவாத அரசியலை இவர்கள் புரிய மறுப்பது, அல்லது புரிந்தும் சில வாய்ப்புகளிற்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுவது தவறானது என்பதனையே  சுட்டி காட்ட விரும்புகிறேன்.

முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்கள் மீதான பிரச்சனையை செயற்படுத்தும் பயங்கரமான அரசியல்வாதிகள்  உள்ள தேசம் இது. இப்போது அந்த பிரச்சனையை ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத இயக்கங்கள் கையில் எடுத்துள்ளன. அதை தேசியரீதியிலான பிரச்சனையைாக மாற்றுவதில் முனைந்து நிற்கின்றன. இலங்கை முழுவதற்குமான புனித பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல்கள் பற்றிய சூடான விவாதங்களை திட்டமிட்டு நடாத்துகின்றன. இலங்கையை மியான்மாறாக மாற்றும் அவர்களின் கனவு திட்டத்தை நிறைவேற்ற இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளப்பார்க்கின்றனர்.

தம்புள்ளை நிகழ்வில் சிங்கள அரசிற்கும், இனவாத அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போன்றவற்றிற்கும் இந்த விவகாரத்தின் பின்பு ஒரு விடயம் பளிச்சென புரிந்துள்ளது. அது “முஸ்லிம்களின் எல்லை கடந்த ஊடக பலம்”.
கட்டுப்படுத்த முடியாத, தணிக்கை செய்ய முடியாத அளவில் அவர்கள் தகங்களிடையே ஊடக வளங்களை கொண்டுள்ளனர். குறிப்பாக இன்டர்நெட் இதில் பெரிய பலம். அல்-ஜெஸீரா முதல் லண்டன் பீ.பீ.சி. வரை அவர்கள்
 இந்த பிரச்சனையை எடுத்து சென்றுள்ளனர்.

சில நாட்களிற்கு முன்பு பென்சில்வேனியா (யூ.எஸ்) நகரில் உள்ள டெம்பிள் யூனிவர்சிட்டி அரசியல் கற்கைகளிற்கான பேராசிரியர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பால்ய நண்பர்.  தம்புள்ளை விவகாரம் தொடர்பாக திடீரென பேசினார்.
 தான்  அதனை இலகுவாக “யாழ் முஸ்லிம்”  இணையத்தின் ஊடாக தொடராக பெற்று கொண்டதாகவும் பின்னர் அதனை  அடிப்படையாக கொண்டு பல ஆங்கில கட்டுரைகளை தம்புள்ளை விவாகாரம் தொடர்பாக எழுதியதாகவும் கூறினார். தான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி நின்றதாகவும் ஆதாரப்படுத்தினார்.

 இந்த வகையில் இலங்கையின் விவகாரங்கள் எங்கிருந்தோ வெளியிடப்பட்டு எங்கிருந்தோ உள்வாங்கப்படும் அளவிற்கு நாம் வளரந்து நிற்கிறோம்.
 தென்னிந்திய பிரபல ஆசிரியர் மார்க்ஸ். அவர் சில தம்புள்ளை தொடர்பான  பதிவுகளை எனக்கு அனுப்பி வைத்தார். அவையனைத்தும் நம்மவர்கள் உலகிற்கு எடுத்துச் சென்ற செய்திகளே. ரஷ்யா டுடே எனும் சோவியத் ரஷ்யாவின் தொலைக்காட்சி தம்புள்ளை விவகாரத்தை செய்தியாக விவரித்து இருந்தது. இதனை அவர்கள் பெற்றுக்கொண்ட ஆதார வழி இலங்கை முஸ்லிம்களின் புளொக்களில் வெளியான செய்திகளே. அதன் மொழி பெயர்ப்புகள் தான் ரஷ்யா டுடேயின் செய்தியாக மாறி நின்றது.
 இது தான் இன்றைய எமது பலம். இதனை இல்லாமல் செய்ய சிங்கள இனவாத சக்திகள் தங்களின் அனைத்து வழங்களையும் திரட்டி செயற்படுவர். அதற்கு பின்பே அடுத்த தம்புள்ளையில் கையை வைப்பார்கள்.

 நாம் அவசரமக சில புரிதல்களிற்கு முன்வரல் வேண்டும். இன்றைய இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகள் என்பது பிரதேச சாயங்களிற்கு அப்பால் முழு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை என உணரப்படல் வேண்டும்.

 அப்படியென்றால் தான் எமது பிரச்சனைகைள் முழு முஸ்லிம் உம்மாவின் பிரச்சனை என்பது உணரப்படல் முடியும்.

 நாம் நிறைய சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் முஸ்லிம் பதிவர்கள், இணையங்களை நடத்துவோர் ஒரு குடையில் அணி திரட்டப்பட்டு அவர்களிற்கான வழிகாட்டல் வழங்கப்படல் வேண்டும். நாம் திட்டமிட்டு உருவாக்காத ஆனால் இனவாதிகளை  திணறடிக்க வைத்த எமது ஊடக பலம் செம்மையாக வழிநடாத்தப்படல் வேண்டும். அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளையுடைய பலமான முகாமாக மாற்றப்படல்
 வேண்டும்.

 சிங்கள பேரினவாதத்தால் சிங்கள தேசத்திலேயே கர்ஜிக்க முடியும். அது சுவிற்சர்லாந்தின் பனி முகடுகளில் ஒரு போதும் எதிரொலிக்க போவதில்லை...!

அபூ ஹம்ஸா

0 comments:

Post a Comment