கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அஹதியா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர் அணிதிரள்வு - பதட்டம் தொடருகிறது



 தம்புள்ள பள்ளிவாயளுக்கு நேர்ந்தது போலவே குருனாகலுக்கு அண்மையில் உள்ள ( சுமார் இரண்டே கி.மீ ) ஆரிய சிங்கள வத்த என்கிற பிரதேசத்தில் ஒரு பதட்டமான சுழ்நிலை உருவாகி வருவதாக  மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குறிப்பிடுகிறார். இவ்வூர் வாணி வீதி என்று தமிழில் அழைக்கப்படுகிறது .

 அவர் மேலும் கூறியவை,
 அஹதியா பாடசாலை நடத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதி, அங்கு தொழுகை நடாத்தக்கூடாது என்று ஊர்பிரமுகர்களை , விகாரைக்கு அழைத்து வழக்கரிஞ்ஞர் முன்னிலையில் கையொப்பம் வாங்கிய செய்தி ஏற்கனவே அனைவரும் அறிந்ததே . இது நடந்து சில தினங்கள் ஆகிறது .
 ஆனால் நேற்று திரும்பவும் குருநாகல் பிரதேச சிங்கள கிராமங்களுக்கு " ஆரிய சிங்களவத்தையில் முஸ்லிம்கள் பள்ளி கட்டுவதாகவும் , அதனை தடுத்து நிறுத்துவதட்காக இன்று ( 20th May ) 4 மணிக்கு பெரும்பான்மை இனத்தவர்களை - அங்கங்கள ரஜ மகா விகாரயில்- ஒன்றுகூடுமாறும் " பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களை சீண்டிவிட இனவாதிகள் எடுக்கும் இம் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக நேற்று இஷா தொழுகைக்குப் பிறகு தெளியாகொன்ன பெரிய பள்ளிவாயலில் ஒரு ஒன்றுகூடல் நடந்தது.
 அப்போது கத்தார் செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்த அமைச்சர் ரவுப் ஹகீமுக்கு தொலைபேசியில் ரிஸ்வி ஜவஹர்ஷா நிலைமைகளை விபரித்தவுடன் , போலீஸ் மா அதிபர் - பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் ஹக்கீம் தொடர்புகொண்டு வேகமாக இயங்கியுள்ளார்.

 இதன் பயனாக இரகசியப் போலீசார் உடனடியாகவே ( இஷாவிட்குப் பிறகு கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே ) குறிப்பிட பிரதேசத்திற்கு விஜயம் செய்து விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

 ரிஸ்வியிடமிருந்து தற்போது கிடைத்த செய்தி இப்போது சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் அஹதியா பாடசாலை அமைந்துள்ள வளவில் காவல் பணிகளில் உள்ளனர் . பன்சலையில் மாலை நடைபெறவிருக்கும் கூட்டத்தை தவிர்க்கிற முயற்சியில் பாதுகாப்பு படையினர் கவணம் செலுத்துகின்றனர் .மீண்டும் ஒரு இனமுறுகல் உருவாகாதிருக்க நாம் துஆ செய்வோம்.

ரவூப் ஹஸீர்

1 comments:

Anonymous said...

குருநாகலுக்கு அண்மையில் உள்ள ஆரிய சிங்களவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அஹதிய்யா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் சிலர் 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த போராட்டம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அஹதியா பாடசாலை நடத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதி, அங்கு தொழுகை நடாத்தக்கூடாது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை (20th May) 4 மணிக்கு பெரும்பான்மை இனத்தவர்களை அங்கங்கள ரஜ மகா விகாரயில் ஒன்றுகூடுமாறு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களின் அஹதிய்யா பாடசாலைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சுமார் 2,3 ஆயிரம் மக்களை எதிர்பார்த்து பல பஸ்களை இலவச சேவையில் அமர்த்தியும் 200க்கும் குறைவானவர்களே வந்துள்ளனர். கூட்டம் நடைபெற்ற நேரத்தில் போலீஸ் பாதுகாப்பும் , பாதையில் ரோந்து நடவடிக்கையும் மிகவும் உஷார் நிலையில் இருந்ததனால் முஸ்லிம் தரப்பிற்கு பெரு வெற்றி அல்லது பெரும்பான்மையினரின் இலக்கில் பெரும் பின்னடைவு என்றே குறிப்பிடலாம்

அதேவேளை அஹதிய்யா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஒன்று திரள்கிறார்கள் என்ற தகவல் பரவியதும் ஊள்ளுர் அரசியல் பிரமுகர்கள் இதுபற்றிய பல்வேறு தரப்பினரினதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இதுகுறித்து பாதுபாப்பு எயர் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment