கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூட்டைப் பூச்சியை விட மோசமானவர்கள்

-
பலரது வீட்டில்
அடுப்பு எரிகிறதோ இல்லையோ
வயிறு எரிகிறது
வட்டிக்குப் பணம் கட்டிக்கட்டி..!

பலர்
வீடு கட்டுவதற்காகத்தான்
வட்டிக்கு வாங்கினார்கள்
இப்போது
வட்டி கட்டுவதற்காகவே
வீட்டை விற்கிறார்கள்.

நம்மவரின்
வீடுகள் பல
அரச வங்கிகளில் இன்னும்
அறுதியாகி நிற்கின்றன.
மீட்டுக் கொள்ள முடியாமல்
பலர்
துக்கத்திலே தொங்கிப் போனார்கள்!

வட்டி
குட்டி போடுகிறதோ இல்லையோ
பலரது வாழ்வை
குட்டிச் சுவராக்கியிருக்கிறது.!

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டுத்தான்
பலரின்று
வட்டியெனும் கொடுமைக்குள்
வசமாக மாட்டியிருக்கிறார்கள்.!

வட்டிக் காரர்கள்
மூட்டைப் பூச்சியை விட
மோசமானவர்கள்.
இல்லை
இரத்தத்தை உறுஞ்சும்
அட்டையை விட அபாயமானவர்கள்.!

எங்களுரில்
சாராயக் கடைக்கும்
லாட்டரி டிக்கட்டுக்கும்
சினிமா தியேட்டருக்கும்
ஒருபோதும் அனுமதியில்லை.
இவையெல்லாம் ஹறாம் என்பதால்.!

ஆனால்
வட்டிக் கடைகளாய் மாறிவரும்
வங்கிகளுக்கு மாத்திரம்
அனுமதியிருக்கிறது.
திறந்து வைத்தவர்களே
ஓதிப் படித்தவர்கள்தானே..?

நாம்
வட்டி வங்கிகளுக்கு
வாசல்களைத் திறந்து கொடுத்து விட்டு
கூடாது என்று
கோசம் போடுவதில்
என்ன பயன் இருக்கிறது..?

வட்டி ஒழிப்பு மகாநாடு
ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து
வாய் கிழியக் கத்துகிறோம்
ஒரு நாளாவது
வட்டி வங்கிகளே வெளியேறென்று
வாசலுக்காவது வந்துள்ளோமா..?

செக்கை வைத்து
வட்டித் தொழில் செய்து
பலரைச் சிலர்
சிக்கலுக்கலுக்குள்
சிறை வைத்திருக்கிறார்கள்.!

வட்டிக்குள் மாட்டிய சிலர்
சிறிய குழியை மூடுவதற்காக
பெரிய குழிகளை வெட்டி
அதற்குள்ளே வீழ்ந்து
அறுதியாகிப் போனார்கள்

வட்டிக்கு
தான் கொடுப்பதே பாவம் என்று
இன்னும் சிலர்
அந்நியர் மூலம்
அதனை நம்மவருக்கே கொடுத்து
அதிக இலாபம் பெறுகிறார்கள்.

கொடுமைகளில் மிகக் கொடுமை
இந்த வட்டியை
கொடுப்பவன் வாங்குபவன்
உண்ணுபவன்
அதற்காய் கணக்கெழுதுபவன்
சாட்சிக்கு நிற்பவன்
அத்தனை பேரையும்
அல்லாஹ் சபிக்கிறான் என்பது
அண்ணல் நபியின் அமுத வாக்காகும்.

ஒரு திர்ஹம் வட்டி
அல்லாஹ்விடத்தில்
முப்பத்தி ஆறுமுறை
விபச்சாரம் செய்த குற்றத்தை விட
கொடியதாகும்.
இதுவும் கோமான் நபியின் கூற்றாகும்.

வட்டிக்கு
தொன்னூற்றி ஒன்பது வாயில்கள்
தாழ்ந்தது
தன் தாயோடு ஸினாச் செய்யப்
போவது போன்றாகும்

வட்டி வாங்குபவனுக்கு
நிரந்தர நரகம் என்பதே
இறைவனின்
நிறைவான கருத்தாகும்
இறைவா..!
வட்டியின்
வாசம்கூடப் படாமல்
எங்களை வாழவைப்பாயாக..?

(கருத்துக்குப் பொறுப்பு கவிதையாக்கியவனே)
மதியன்பன்-

0 comments:

Post a Comment