கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில்

2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அறிக்கையானது இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது .
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற 2011 ஆம் ஆண்டுசனத்தொகை கணக்கெடுப்பு ஒரு மாதத்திற்குப் பின்னர் வெளிவரவுள்ளது. இவ்வறிக்கையானது மாவட்ட ரீதியிலான சனத்தொகை மதிப்பீட்டினை உள்ளடக்கியதாகவும் 1981 மற்றும் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பீடுசெய்யப்பட்டு வெளிவருமென குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர் திருமதி மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2011 ஆம் ஆண்டுசனத்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கையில் வடக்கு மற்றும் அம்பாறை தவிர்ந்த கிழக்குப் பகுதிகளில் உள்ள சனத்தொகையானது 2001 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக, முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக 2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் காட்டுவதாக தெரிவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது .

ஏ.அப்துல்லாஹ் :

0 comments:

Post a Comment