கஹட்டோவிட கிளினிக் பாதை புணரமைப்பு - மேலமாகான சபை உறுப்பினா் சாபி ரஹீம் நிதி உதவி.
நீண்ட காலமாக சீரற்றுக் காணப்பட்ட கஹட்டோவிட தாய்மார் பிள்ளை பராமரிப்பு நிலையத்திற்கான வீதி மேல்மாகான சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா் ஜனாப் சாபி றஹீம் அவா்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்புணரமைப்பு வேலைக்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் 25 வருடங்களிற்கு முன்னர் எமதூருக்கென்று கிளினிக் காணப்படாதபோது எமது ஊரின் கா்ப்பினிப் பெண்கள் அண்மையில் உள்ள சிங்களக் கிராமமான வல்கம்முல்லை கிளினிக்கிற்கு சென்றே மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வந்தனா். இதன் பின்னா் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியின் பயனாக கஹட்டோவிடாவிற்கான கிளினிக் நிா்மாணிக்கப்பட்டு திறநது வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து இக்கிளினிக்கிற்கு சுற்று மதில் கட்டுவத்ற்கும் முஸ்லிம் காங்கிரஸ் நதியொதுக்கி தந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மூன்றாவது கட்டமாக இக்கிளினிக்கிற்கான பாதையை கொங்கிரீட் இட்டு செப்பனிட்டு கடந்த மாதம் மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. இதுவரை இவ் அபிவிருத்திப் பணிகளுக்காக சாபி ரஹீம் அவா்களின் நிதியொதுக்கீட்டிலிருந்து சுமார் 42 இலட்சம் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment