கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உழ்ஹியா (குர்பான்) பற்றி பொலிசாரின் அறிவிப்பு



உழ்ஹியாவுக்கான கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம்

2013-10-16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு 2013-10-11 ஆம் திகதி முதல் 2013-10-17 ஆம் திகதி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டு செல்லப்படும் போது அதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரங்கள் இருக்குமிடத்து அந்த வாகனங்களை சகல சோதனைச் சாவடிகளிலும் தாமதப்படுத்தாது விடுவிக்குமாறு இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.


எப்படியிருப்பினும் இக்கால எல்லைக்குள் விலங்கு வதை சம்பந்தமான நடைமுறைப்படுத்தல் முன்னர் போலவே செயற்படுத்தல் வேண்டும்.


காமிணி நவரட்ணா
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
நிர்வாக பிரிவு


குறிப்பு - இந்த சுற்றுநிருபம் நாட்டிலுள்ள சகலபொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

0 comments:

Post a Comment