கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

“மிஸ்டர் பீன்” இஸ்லாத்தில் இணைந்தார் !! (?) - முதலில் செய்தி வெளியிட்டது யூத ஊடகங்களே..





சார்ளி சப்ளினின் பின்னர் உலகம் முழுதும் உள்ள மக்களை தனது நகைச்சுவை மூலம் தன் கட்டுப்பாட்டில் தொடராக தக்க வைத்திருந்தவர் Rowan Atkinson. “மிஸ்டர் பீன்” என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. அவர் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.

 “நான் முஸ்லிம்கள் பற்றியும் நபி முஹம்மத் பற்றியும் எடுக்கப்பட்ட அண்மைகால படங்களை பார்த்தேன். அது பற்றிய ஆராய்தலின் விளைவே எனக்கு இஸ்லாம் கிடைக்க வழிவகுத்தது” என்று ரொவான் அட்கின்சன் கூறியுள்ளார். 

இந்த தகவலை ஒரு இஸ்ரேலிய உடகவே முதலில் வெளியிட்டது. அதன் பின்னர் சுமார் 60 இற்கும் அதிகமான யூத இணையத்தளங்கள் இதனை பதிவிட்டுள்ளன. இந்த செய்தி பரவிய பின்னர் அரபு மற்றும் முஸ்லிம் ஊடகங்கள் இதனை பரவலாக பகிர்ந்துள்ளன. பேஸ் புக் பற்றி பேசவே தேவையில்லை.

Israellycool தங்களால் இதனை நம்ப முடியாது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தளம் மட்டுமே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ள அதே வேளை ஏனைய இஸ்ரேலிய சார்பு ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் இராஜதந்திரரீதியில் ஈரானிய அதிபரின் நடவடிக்கைகள் மேற்கை கவர்ந்ததும் இஸ்ரேலிய பிரதமரின் உரை உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்ததும் நாம் அறிந்ததே.

தங்களின் அரசியல் தோல்வியை தவிர்க்கும் வண்ணம் இந்த கதையாடல் உருவாக்கப்பட்டு ஸியோனிஸ ஊடகங்களின் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளதா அல்லது உண்மையாகவே அவர் புனித இஸ்லாத்தில் நுழைந்துள்ளாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.!!

0 comments:

Post a Comment