அழிந்து போகும் ஜாஹிலியத்தும் அதனை உயிர்ப்பிக்கத் துடிக்கும் ஆசான்களும் (அல்பத்ரியா ஆசிரியர் தின நிகழ்வுகள்)
பல்வேறு துறைசார் புத்திஜீவிகளையும்,மார்;க்க அறிஞாகளையும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கிய வரலாறு எமது கஹட்டோவிடாவிற்கு உண்டு. எனினும் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, பாடசாலை முதல் ஆற்றங்கரை வரை பெருகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், ……. என்று பட்டியல் நீளுமளவுக்கு நமதூரினி பின்னடைவை எதிர்வு கூறும் காரணிகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக பாடசாலை சூழல், சமூக சூழல், வீட்டுச் சூழல், சிறந்த முன்மாதிரிகள் போன்றன பிரதான காரணிகளாகவிருக்கின்றன. தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியும், சீரழிந்த சினிமாவும் மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கின்றன. ஆசிரியர் பகுதியும் மானவர் பகுதியும் ஒழுங்குறவிருந்தாலேயே கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கும். ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் கருத்து.
கிறாஅத்துடன் ஆரம்பித்து துஆவுடன் முடிவடைந்து விட்டால் ஏதோ இஸ்லாமியப் பண்பாட்டையே நடைமுறைப்படுத்தி விட்டதாக நாம் மெச்சிக் கொள்வது முட்டாள்தனமாகும். முன்மாதிரியான கடமையுணர்வுள்ள ஆசிரியர் குழாம் செயலாற்ற முனைவார்களானால் அது மாற்றத்திற்கான விடிவெள்ளிகளை நம் வானில் புலரச் செய்யும். இல்லாது போனால் பாதாள உலகக் கும்பல்களையும் காடயர்களையும் பயிற்றவிகும் தளமாக அல்லது சமூக விரோதிகளின் உறைவிடமாக பாடசாலைகள் மாறிப் போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையைப் போன்று இஸ்லாமிய போதனைகளை ஆக்கவேண்டாம். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள்.
ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்
(அல் குர்ஆன்)
ஆசிரியர் தின நிகழ்வுகளை சிறப்பாக வழிநடாத்த முடிந்த உங்களுக்கு அதில் இஸ்லாமிய வரம்புகளை முடியுமான அளவுபேணியிருக்கலாம். இன்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வுகளில் மார்க்க அறிந்த மௌலவிமார்களின் முன்னிலையில் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பியமை பற்றி பலரும் பலவாறு கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் தின நிகழ்வுகள் நடாத்தப்படுவது சந்தோசமாக இருந்தாலும் சினமாப்பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய பாடல்கள் ஔிபரப்பியமை மார்க்கத்தில் எந்தளவுக்கு அங்கீகாரம் பெற்ற விடயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் கூட அவர்களுடைய கையடக்கத் தொலைபேசிகளில் இந்த சினிமாப் பாடல்களை சத்தமாக போடுவதற்கு வெற்க்கப்படும் சூழலில் மாணவர்களை வழிநடாத்தவேண்டிய பாடசாலை ஒலிபெருக்கியில் சினிமாபாடல்கள் ஒலிபரப்பப்பாட்டால் எப்படியிருக்கம். ஆரம்பகாலம் போலன்றி மார்க்க விடயத்தில் விளிப்புணர்வு ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் முன்மாதிரியான ஆசிரியர் தின நிகழ்வுகளாக இது அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனபது எமது கருத்து.
3 comments:
good points appreciate this article...
ஆரோக்கியமான கருத்துக்கள். நீங்கள் கூறுவதைப்போல மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாகவேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு பாடசாலைக்கு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேபோன்று பெற்றோர்களுக்கும் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
Emazu oor padasalayil ulla moulavi asiriyarmarhal izai thadukkavillaya? Avarhalal thaduthirukka mudiyum, but avarhalin polappil manvilunthidume enruthan payappaduhirarhal..allah ellavatraiyum arinthavan...
Post a Comment