கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

”மைதானம்” சம்பந்தமாக கஹடோவிட விளையாட்டு கழகத்தினால்(KSC) அன்மையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்..




ஆங்கில மொழிமூலம் கிடைக்கப்பெற்ற இநத தகவல்களை நாம் எமது வாசகர்களுடன் தமிழ்மொழி மூலம் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த இளைஞர்களுடைய முயற்சிக்கு எல்லாம் வள்ள அல்லாஹ் உதவிசெய்யவேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்....


கஹடோவிட விளையாட்டு கழகத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த எமது ஊரின் முக்கிய அணிகளின் சில உறுப்பினர்களைக்கொண்ட கூட்டம் ஒன்று சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (11/10/2013) அன்று சகோ. முபீன் ஹாஜியார் வீட்டில் இடம்பெற்றது. மேற்ப்படி கூட்டத்தில் எமது ஊர் மைதானத்தின் தோற்றம் பற்றியும், கஹடோவிட விளையாட்டு கழகத்தின் நிர்வாக தோற்றம் பற்றியும் சில விடயங்கள் பேசப்பட்டன. கூட்டத்தின் கருவாக, எமது ஊர் வீரர்களின் நன்மை கருதியும், ஊர் மைதானத்தின் நன்மை கருதியும் சில முக்கியமான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேற்ப்படி வகுக்கப்பட்ட சட்டங்களாவன,

1) மைதானத்தின் எல்லைக்குள் எந்தவிதமான போதைப்பொருளும் (தூல்,சிகரட்,மாவா,சாராயம்,மற்றும் இது சார்ந்த ஏனைய போதைப்பொருட்கள்) பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில், அவர் அந்த நாளில் விளையாட அனுமதி வழங்கப்பட மாட்டாது, அது ஒரு சுற்றுப்போட்டியாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த போட்டித்தொடரிலேயே விளையாட அனுமதி மறுக்கப்படுவார்.

2) மைதானத்தில் விளையாடுபவர்கள் தொடைகளை மறைத்து விளையாட வேண்டும்.

3) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரமே சுற்றுப்போட்டிகள் அமைய வேண்டும்.

4) சுற்றுப்போட்டிகள் நடத்த வேண்டும் எனில், சுற்றுப்போட்டி சம்பந்தமான அனைத்து தகவல்களும் கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு சமர்ப்பித்து அனுமதி பெறல் வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பின்னரே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

5) சுற்றுப்போட்டிகளை நடத்த வேண்டும் எனில், அனுமதி வழங்கப்பட்ட பின் போட்டி நடத்துனர் ஒரு நாளைக்கு ரூ.1000 மைதனத்துக்காக வழங்க வேண்டும். மேற்படி தொகையானது பள்ளிக்கு (யாவியா) ரூ.750 கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு ரூ.250 என்று பகிரப்படும்.

6) சுற்றுப்போட்டிகளை நடத்துபவரே சுற்றுப்போட்டி முடியும் வரை சுற்றியுள்ள காணிகளுக்கும் நிலங்களுக்கும் பொறுப்பு சொல்ல வேண்டும்.

7) தொடர்ப்போட்டிகள் (நட்பு போட்டிகள் -friendly matches) விளையாட வேண்டும் எனில் 2 நாளைக்கு முன்பாக கஹடோவிட விளையாட்டு கழகத்திடம் அனுமதி பெற்று இருத்தல் வேண்டும். (இதற்க்கு பொறுப்பானவர்- சகோ.இஹ்திஸாம் ஹாஜியார்)

ஒரு அணி மாத்திரம் அல்லது வெளி அணிகளுடன் போட்டி நடை பெற அனுமதி வேண்டும் பட்சத்தில் ரூ..250 கஹடோவிட விளையாட்டு கழகத்திற்கு வழங்கப்படல் வேண்டும். மாத்திரம் அன்றி ஒரு நாளின் அரைப்பகுதியே வழங்கப்படும். (காலை 9.00-12.30 அல்லது பகல் 1.00-4.30)
இவை எமது ஊரின் விளையாட்டு வீரர்களுக்காகவும், மைதானத்துக்காகவும் எதிர் கால நன்மை கருதி வகுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட சில முக்கியமான சட்ட திட்டங்கள். கஹடோவிட விளையாட்டு கழகம் ஸவியா வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இது போன்ற ஒழுக்காற்று நடவடிக்களை பேணுவதன் மூலமே இந்த மைதானத்தின் ஒப்பந்த நீடிப்பு தீர்மானிக்கப்படும்.

0 comments:

Post a Comment