கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாராட்டப்படவேண்டிய பாராட்டு விழா - 2013 புலமைப்பரிசில்

 

'2013 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா' எனும் தொனிப் பொருளில் பத்ரியா, பாலிகா இரு பாடசாலைகளையும் சேர்ந்த, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 14 மாணவர்களையும், மேற்படி பரீட்சையில் 100 க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நோக்கில் 31- 10 – 2013 அன்று பாலிகா பாடசாலை முற்ற வெளியில் வெகு விமர்சையாகப் பாராட்டு விழா அரங்கேறியது. பிரதம அதிதியாக ஜனாதிபதியின் மத்திய கிழக்கு இணைப்புச் செயலாளர் ஹஸன் மௌலானாவும், விஷேட அதிதிகளாக இன்னும் சிலரும் விழாவுக்கு வந்திருந்தனர். மழையினும் பாராது தாய்மாரும், மாணவர்களும் இவ்விழாவில் பங்கேற்றதைக் காண முடிந்தது.
 
கல்வியை ஊக்குவிக்க கனிசமான செயற்றிட்டங்கள் நம் சமூகத்தில்  தேவைப்படும் சமயத்தில் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதானது அடிப்படையில் பாராட்டப்பட வேண்டியதே. இரு பாடசாலைகளுக்கிடையிலும் வர்க்க வேறுபாடு போன்ற ஒரு வகை ஓவ்வாமையுடன் கூடிய கசப்புணர்வு திரை மறைவில் நிழலாடிக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான கூட்டு முயற்சிகள் முரன்பாடுகளுக்கப்பாலான சமத்துவத்தையும், ஐக்கியத்தையும் வளர்க்குமென்பதில் இரண்டாம் கருத்துக்கிடமில்லையெனலாம்.
 
'நிரந்தர தர்மம் எனும் நோக்கில்  கல்வியை ஊக்குவிக்கச் செலவு செய்தல்' என்ற சிறந்த ஆதங்கமே இவ்விழாவுக்கான அடிப்படையாகும். விழாவில் ஆற்றப்பட்ட உரைகளில் 'ஸதகத்துல் ஜாரியா' என்று தெளிவாகவே இது தொடர்பில் கூறப்பட்டதிலிருந்து இதையறியலாம். 'ஸதகத்துல் ஜாரியா' எனும் உயரிய நோக்கில், ஒரு முஸ்லிம் பாடசாலையில், ஒரு முஸ்லிம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிதிகள்பெற்றோர்கள் முன்னிலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்கள் பாராட்டப்பட்டுள்ளார்கள் என்பதுவே விழாவின் சாரம்சமாகும்.
 
அரச உத்தியோகபூர்வ விழாக்களின் போது பாடசாலைகளில் பேன்ட் வாசிக்கும் வழமையுள்ளது. மார்க்க அடிப்படையில் இதுவும் பிழையென்றாலும் இதற்காக சில நிர்ப்பந்த நியாயங்கள் சொல்லப்படுகின்றன. இதுவும் மறுதலிக்கப்படவேண்டியதே. இது இவ்வாறிருக்க தனியாரால் நடாத்தப்பட்ட இவ்விழாவில் உயரிய இந்த நோக்கத்தைப் பாழாக்கும் வகையில் விழாவில் புகுந்திருந்தவைகளில் முக்கியமான ஒருவிடயம் பேன்ட் வாசிப்பு இதில் பாடசலை நிர்வாகம் கவனம் செலுத்தியிருந்தால் எதிர் காலத்தில் நடக்கவிருக்கின்ற இதுபோன்ற விழாக்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.

இந்த ஆக்கத்தை பகிர்ந்துகொண்ட சகோவிற்கு நன்றி ஜதாகுமுல்லாஹ்..
உங்களால் எழுதப்பட்ட ஒருசில தகவல்களை எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை அதனால் ஒருசிலபகுதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தாழ்மையாக சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம். 

 

3 comments:

MBShoukie said...

கிடைத்த தகவல்களை உங்களாலேயே உறுதிப்படுத்த முடியாத நிலையில், அதே நேரம் ஒரு சில பகுதிகளில் திருத்தமும் தேவை என்று நீங்களே நினைக்கின்ற ஒரு விடயத்தை ஒரு செய்தியாக பதிவதை எந்த தர்மத்தில் அடக்கலாம்?
செய்தியாளர்களின் பண்புகளில் முக்கியமானது தமக்குக் கிடைக்கும் செய்திகளை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுவதாகும். இனிவரும் செய்திகளில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லாத போது அது உங்கள் தளத்தின் உயரிய நோக்கத்தைப் பாழாக்கி விடும்!

Anonymous said...

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.22:73

தர்காவுக்கு நேந்து விட்ட கோமாலி விசேட அதிதியா? யாரிடம் சொல்ல ஏன் மற்ற இரு அதிதிகளும் விடுபட்டார்கள் அப்துல்காதர், அஸ்வா் .....

Anonymous said...

நளீமிக்கள், இஸ்லாகிக்கள், கபுரீகள் இவ்வளவு உலமாக்களின் முன்னால்தான் இந்த அனாச்சாரங்கள். இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவென்றால் பிரதம அதிதி யா அல்லாஹ் மார்க்கம் அறிந்த ஆலிம்களின் நிலைமையாரிடம் சொல்ல. எமக்குத் தெரியும் எழுதுகிற கருத்துக்களை நீங்கள் அனுமதிப்பதில்லை என்பது.......

Post a Comment