கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சோனக அடையாளங்களை படிப்படியாய் இழந்து வரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயம்


கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தில் கடந்த 11.02.2010 அன்று நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் சில விடயங்களை இங்கே அவதானிப்புக்காய் விடுவது பொருத்தமாகவிருக்கும் என நினைக்கின்றேன்.

இஸ்லாத்தை முழுமையாகப்பிரதிபலிக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலையை நோக்கமாகக் கொண்டுதான் நாம் இதை எழுதுகின்றோம் என்றாலும் ஓருபடி கீழிறங்கி குறைந்த பட்சமேனும் ஒரு முஸ்லிம் பாடசாலையொன்றில் காணப்படவேண்டிய சில இலட்சணங்களை நமது பாடசாலைகள் இழந்து வருகின்றன என்ற கவலையினை கருத்தாக வடிப்பதன் மூலம் உணரும் உள்ளங்களைத் தட்டிவிடலாம் என்றெண்கின்றோம்.

கடந்த விளையாட்டுப் போட்டியில் அஸர் தொழுகைக்காக நேரம் வழங்கப்படவில்லையென்பது மிகப்பெரும் தவறென்பதற்கு அப்பால் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் மீறுவதாகின்றது. விளையாட்டுப் போட்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் மைதானத்தில் தொழுதிருக்க வேண்டும் என்று கூட நாம் கூறவரவில்லை. தொழவிருப்பவர்கள் எங்காவது தொழுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே கூறவிளைகின்றோம்.

யுத்த களத்திலும் கூட தொழுகையைக்கடைபிடிக்கச் சொல்லும் மார்க்கம் இஸ்லாமாகும். பொதுவாக நமது பாடசாலைகளில் தொழுகைக்காக பிரத்தியேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாடநேரங்களில் தொழுகைக்காக நேரமொதுக்கப்படுகின்றன. கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தில் அண்மையில்தான் புதிதாக ஒரு பள்ளியொன்றும் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இன்னொரு பள்ளியும் இருக்கின்றது. ஆகவே தொழுகைக்காக நேரமொதுக்குவதால் விiயாட்டுப்போட்டிக்கு பாதிப்பேதும் ஏற்பட்டிருக்காது. இன்னும் சொல்லப்போனால், இந்த விளையாட்டுப்போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்களுல், இலங்கையில் பிரபலமான இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களில் பட்டம்பெற்ற சிலரும் இருந்திருக்கிறார்கள். பாடசலை ஆசிரியர்களில் சிலர் மௌலவிமார்களாகும். அத்துடன் பிரதம அதிதிகளாகவிருந்தவர்களில் மௌலவிமார்களுமிருந்துள்ளனர் பள்ளிவாசல்களின் நிருவாகத் தலைவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இத்துனை பேருக்கும் அஸர் தொழுகைக்காக நான்கு திசைகளிலிருந்தும் ஒலித்த அதான் ஓசைகள் கேட்கவில்லையோ தெரியவில்லை.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

5 comments:

Anonymous said...

"இலங்கையில் பிரபலமான இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களில் பட்டம்பெற்ற சிலரும் இருந்திருக்கிறார்கள். பாடசலை ஆசிரியர்களில் சிலர் மௌலவிமார்களாகும். அத்துடன் பிரதம அதிதிகளாகவிருந்தவர்களில் லமௌலவிமார்களுமிருந்துள்ளனர் பள்ளிவாசல்களின் நிருவாகத் தலைவர்களும் இவர்களில் அடங்குகின்றனர்."
மேலே கூறப்பட்ட விடயங்கள் நபி( ஸல்) அவர்களின் முன்னறிவுக்களை உண்மைப்படுத்துவதுபோன்றி இருப்பது மிக வேதனை தரக்கூடிய விசயம்.

Anonymous said...

Ezuvenna pudiya issua..? Al Badriya Eppozo Islamiyatta elandachchu..!

Anonymous said...

இதுவென்ன “புதிய விசயமா…? எப்போ மாணவர்கள் பிறருக்காக எழுந்து நின்று மரியாதை செய்யனும் என்று வற்புறுத்தினாங்களோ அன்னயோடே அதுட இஸ்லாமியம் வெளுத்துப்போச்சு. இதத்தெரியாம இத ஒரு இசுவா எழுதியிருக்கீங்களே. டய்ம் வேஸ்டுங்க. கவல என்னன்னா இஸ்லாமிய தெளிவுள்ள பலர் இதுல மாட்டக்கிட்டிருப்பதுதான். அல்லாஹவாப்பாத்து நேர்வழிகாட்டினாத்தான் சரி…!

ASAL said...

Now school teachers and principals are want islam to get help all others are as they wish

Asal

Anonymous said...

yes brother Asal, completely I agree with your opinion. just we backed to our past history of Al Badiriya, we could understad much about. Anyhow I think they are planning another masjid building now a days because prsent masjid also going to be class room in future...

finally, Allah bless your work, we wait more and more news with you..

Post a Comment