யார் அந்தப் பெண் ஷெய்த்தான்
கஹட்டோவிட்ட தஃவாப்பள்ளியில் முஜாஹித் மௌலவியால் நடாத்தப்பட்ட பயானுக்கு முன்னர் பேசியவர் கஹட்டோவிட்டவில் பெண் ஷெய்த்;தான் ஒன்று உருவாகியிருப்பதாகவும், அதனால் புதிய புதிய அனாச்சாரங்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார். இது ஊரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மூன்று வருடம் படித்த பெண்ணொருவர் சில பெண்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பூத்தூவி மங்களகரமாக ஆன்மீகத்தின் பெயரால் அட்டகாசம் பண்ணுவதாக தஃவாக்காரர்களால் விமர்சிக்கப்படுகிறார். இவ்வதந்திகளை மறுதளித்து விளக்கமளிப்பதற்காக 14.2.2010 ல் அந்த பெண்கள் மத்ரஸாவில் விஷேட அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்தன.
எது எப்படி இருந்தாலும் பெண் ஷெய்தான் என்று தஃவாக்காரர்கள் பகிரங்கமாக சொல்லியிருப்பதானது கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்குது. ஆன்மீகத்தொண்டு புரிபவங்களை இவ்வாறு அநாகரிகமாத் தூசிக்கக் கூடாதப்பா. ஆந்த மத்ரஸாவுக்குப் போற பிள்ளைகள் முகத்தையெல்லாம் மூடிக்கிட்டுப் போறாங்க. இது எவ்வளவு நல்ல விஷயம். இது இந்த தஃவாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை போலும். நல்லத யார் செய்தாலும் அதை எடுத்துக்கனும் என்பதை தஃவாக்காரர்கள் நன்கு புரிந்து கொள்ளனும்.
ஆனாலும் இந்த பூத்தூவல் விவகாரம் என்னவென்று நமக்குக் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கு. தஃவாக்காரர்கள் சும்மா எதையும் சொல்லமாட்டாங்களே. புகிரங்கமாக ஊர் முழுக்கக்கேட்கச் சொன்ன குற்றசாட்டுக்கு நாலு செவருக்கு மத்தியில ஆறுபேர் கேட்பதற்கு மறுப்புச் சொன்னா அது பொருத்தமில்ல. மத்ரஸாதான் ஊருக்கு உயரத்துலதான இருக்கு அங்கிருந்து ஓரு சின்ன ஸ்பீக்கர்ல சொன்னா கூட ஊர் முழுக்கக் கேட்டிடும். இத மிக அவசரமாகவே நம்ம மவ்லவியா தரப்பு செய்யனும் அப்பதான் இந்த தஃவாக்காரர்கள்ட வாய அடைக்கலாம்.
இதுல இன்னொரு பிரச்சிண இருக்கு மவ்லவியா தரப்புல பதிலடி கொடுப்பதற்கு தரமான மௌலவியில்ல என்பதுதான் அது. அதக்கெல்லாம் கவலப்படக்கூடாது அதுக்குத்தான் நம்ம தரீக்காக்களின் மௌலவிமார் இருக்கிறாங்களே கூட்டிவரவேண்டியதுதான். ஆனா கட்டாயம் இத மிக அவசரமாகவே செய்யனும். நாங்க நடுநிலையாக இருப்பவங்க எங்களுக்கு இதன் உண்மை என்னவென்பது புரியனும். மௌலவியாத் தரப்பு தகுந்த நடவடிக்கைகள முன்னெடுக்கனும். எங்களுக்கு இந்த மார்க்க விஷயங்கள் அவ்வளவு ஓடாது. ஆனா எங்கட ரத்தம் கொதிக்குது யாரையாலும் கூட்டிவந்து இந்த தஃவாக்காரர்களுக்கு பதிலடி கொடுங்கனு சொல்லி பணிவா கேட்டுக் கொள்கிறோம்.
7 comments:
”பெண்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பூத்தூவி மங்களகரமாக ஆன்மீகத்தின் பெயரால் அட்டகாசம் பண்ணுவதாக”
இது புதுசி, நாங்களும் கஷ்டோவிடிதான் ஆனா எங்களுக் இந்தவிசயம் இதப் படிச்சபொரகுதான் தெரியும். இது மட்டும் உண்மையாக இருந்தா செல்லிவேலில்ல இன்னங்கொஞ்சம் நாளில டீவில போர தமிழ் நாடகங்களில நடக்கிர கூத்தெல்லாம் எங்களுக்க கஷ்டோவிடில இருந்து நேரடியா பாக்கேலும் போல..
,ந்த விடயத்தில் பயான் பன்னியவர் தவறாக பேசினாரா அல்லது மௌலவியா உண்மையிலேயே தவறு செய்துள்ளாரா என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளாதவரையில் ஊடகம் என்ற வகையில் தங்களது செய்தி பக்கச்சார்பானதாகவே ,ருக்கிறது.
,து ஊடக தர்மத்திற்கப்பாட்டது மட்டுமன்றி ,ஸ்லாமும் அங்கீகரிக்காத செயலாகும்.
எமக்கும் கிடைக்கும் செய்திகளை தீர விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. அவ்வாறே 'ஒரு கண்ணைப் பறிகொடுத்தவன் வந்து தனது கண்ணைப் பிடுங்கியவனுக்கு எதிராக சாட்சி சொன்னால் உடனே தீர்ப்புக் கூற வேண்டாம்' என்றும் 'ஒருவேளை அவனது ,ரு கண்களும் ,வனால் பிடுங்கப்பட்டிருக்கலாம்' என்றும் கலீபா உமர் (றலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
எனவே ஊடகங்கள் எப்போதும் நடுநிலை பேணி நடந்துகொள்வதோடு முரண்பாடுகளுக்கு வழி சமைக்காது ,ணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எனது கருத்துக்கள் தொடர்பாக தங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் ,ருந்தால் தெரிவிக்கலாம்.
”இந்த விடயத்தில் பயான் பன்னியவர் தவறாக பேசினாரா அல்லது மௌலவியா உண்மையிலேயே தவறு செய்துள்ளாரா என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளாதவரையில் ஊடகம் என்ற வகையில் தங்களது செய்தி பக்கச்சார்பானதாகவே இருக்கிறது.
இது ஊடக தர்மத்திற்கப்பாட்டது மட்டுமன்றி ,ஸ்லாமும் அங்கீகரிக்காத செயலாகும்.
எமக்கும் கிடைக்கும் செய்திகளை தீர விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. அவ்வாறே 'ஒரு கண்ணைப் பறிகொடுத்தவன் வந்து தனது கண்ணைப் பிடுங்கியவனுக்கு எதிராக சாட்சி சொன்னால் உடனே தீர்ப்புக் கூற வேண்டாம்' என்றும் 'ஒருவேளை அவனது ,ரு கண்களும் ,வனால் பிடுங்கப்பட்டிருக்கலாம்' என்றும் கலீபா உமர் (றலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
எனவே ஊடகங்கள் எப்போதும் நடுநிலை பேணி நடந்துகொள்வதோடு முரண்பாடுகளுக்கு வழி சமைக்காது ,ணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எனது கருத்துக்கள் தொடர்பாக தங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம்.“
நீங்கள் கூறுவதைப் போன்று இந்த விடயம் பக்கசார்பாக எனக்குத் தென்படவில்லை. எது எப்படியிருந்தாலும், கட்டுறை எழுதப்பட்டவரால் சொல்லப்பட்ட விடயங்கள் நான் அறிந்தவரையில் முற்றிலும் உண்மையே
குறிப்பு
“தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?“ கட்டுறையின் மூலமாக நமது கருத்துக்களை எழுதத்துாண்டியமைக்கு நன்றி....
''பகிரங்கமாக ஊர் முழுக்கக் கேட்கச்சொன்ன குற்றச்சாட்டுக்கு நாலு செவருக்கு மத்தியில ஆறு பேர் கேட்பதற்கு மறுப்புச் சொன்னா அது பொருத்தமில்ல.''கட்டுரையிலுள்ள மேற்படி வாசகம் பக்கச்சார்பாக இல்லையா..?
''மத்ரஸாதான் ஊருக்கு உயரத்துலதான இருக்கு அங்கிருந்து ஒரு சின்ன ஸ்பீக்கர்ல சொன்னாக்கூட ஊர் முழுக்கக் கேட்டிடும்.இத மிக அவசரமாகவே நம்ம மௌவியா தரப்பு செய்யனும்.அப்பதான் இந்த தஃவாக் காரர்கள்ட வாய அடைக்கலாம்.'' இந்த வாசகத்தைக் கவனியுங்கள். மறுப்புச் சொல்வதும் சொல்லாமலிருப்பதும் சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பான விடயம்.ஆனால் இந்ந வசனங்கள் கண்டிப்பாக மறுப்புச் சொல்ல வேண்டுமெனத் தூண்டி விடுவது புரியவில்லையா..? ஊடகங்களின் பணி தூண்டி விடுவதுதானா....? இன்னுமொரு வாசகத்தைக் கவனியுங்கள்.
''ஆனா எங்கட ரத்தம் கொதிக்குது யாரையாலும் கூட்டி வந்து இந்த தஃவாக்காரர்களுக்கு பதிலடி கொடுங்கனு சொல்லி பணிவா கேட்டுக்கொள்கிறோம்.'' இதுக்கு என்ன விளக்கம் சொல்லப் போறீங்க...? தஃவாக் காரர்களோடு கட்டுரையாளருக்கு ஏதும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருந்தாலும் கூட இப்படி எழுதுவது ஊடக தர்மமாகுமா....?
மூட்டி விடுவதும் தூண்டி விடுவதும் ஊடகப் பணி என கட்டுரையாளர் எங்கிருந்து கற்றுக்கொண்டார்....?
மனிதர்கள் யாவரும் தவறு செய்வதும் பிழை விடுவதும் இயல்பு.ஆனால் அவை சுட்டிக் காட்டப்படும்போது ஏற்றுக்கொள்வதுதான் சிறந்த பண்பு.
நீங்கள் சொல்வது போல் நடந்த சம்பவங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் இங்கு சுட்டிக்காட்டியது கட்டுரையாளரும் அவரது கட்டுரையைப் பதிவு செய்த இந்த தளத்தின் இயக்குநர்களினதும் பிழையையே.
இறுதியாக, எனது கருத்துக்கள் தொடர்பாக குறித்த கட்டுரையாளரினதும் இக்கட்டுரையைப் பதிவு செய்த இந்த தளத்தின் இயக்குநர்களினதும் விளக்கங்களை எதிர்பார்த்து முடிக்கிறேன்.
நமது இணையத்தளத்தை ஒரு புள்ளி பிசகாது கவனிக்கின்ற Fowz என்ற பெயரில் எழுதும் அந்த வாசகருக்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யார் அந்தப் பெண் சைத்தான்? என்ற ஆக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மைதான் என்பதை ஆமோதித்தமைக்கு அந்த வாசகருக்கு நமது வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். தனிக்கை, மிகைப்படுத்தல், திரித்துக் கூறுதல், இருட்டடிப்பு போன்றன எந்தவொரு ஊடகங்களுக்கும் இருக்கக் கூடாத பண்புகளாகும். இதற்கேற்பவே நாம் செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றோம் என்பதனை அந்த சகோதரரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
பெண்சைத்தான் என்ற வாசகத்தின் காரசாரமும், வீரியமும் நாம் கவனித்தவைகளாகும். இது ஒரு வலிமையான குற்றச் சாட்டாகும். ஆகவே பாமர மக்களாகிய எமக்கு இது விடயத்தில் உண்மையும், தெளிவும் தெரிய வேண்டும் என்பது நமது நோக்கமாகும். இதனைச் சொல்ல வந்த வேகமும் நடையும் அந்த சகோதரருக்கு வேறுவிதமாக புரிந்துவிடது போலும்.
அடுத்து நாம் எவருக்கும் கூஜாத் தூக்குபவர்களல்லர். சேறு பூசுபவர்களுமல்லர். நடந்ததை நடந்தவாறு சொல்வதையே நாம் செய்து வருகின்றோம். இதைப் பிடிக்காதவர்களுக்கு நாம் பக்கச்சார்பானவர்களாக, தமது எதிரிகளாக தெரியலாம். இதைப் பிடித்தவர்களுக்கு நாம் சூப்பர் ஸ்டாராகக் கூடத் தெரியலாம். இது பொதுமக்களின் இயல்பாகும். இதை நம்மால் மாற்ற முடியாது.
இந்த வலைதளத்தின் ஆசிரியரது பாராட்டுக்கு எனது நன்றிகள். முதலில் நான் தஃவாக் காரர்களுக்கோ அல்லது மெலளவியாத் தரப்புக்கோ சார்பாக எந்தக் கருத்துக்களையும் எனது முன்னைய இடுகையிலோ இந்த இடுகையிலோ குறிப்பிடவில்லை என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.
'யார் அந்தப் பெண் சைத்தான்' என்ற ஆக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மையென நான் ஏற்றுக்கொண்டதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கனம் ஆசிரியர் அவர்களே, எனது வசனங்களை மீண்டும் ஒரு தடவை நிதானமாக வாசித்துப் பாருங்கள். ' நீங்கள் சொல்வது போல நடந்த சம்பவங்கள் உண்மையாக இருக்கலாம்' என்றுதான் குறிப்பிட்டுள்ளேனே தவிர உங்களது வியாக்கியானத்தின்படி அல்ல.
எனது கருத்துப்பதிவில் நடந்த சம்பவம் குறித்து நான் அழுத்திப் பேசவோ விவாதிக்கவோ இல்லை. ஏனெனில் அதன் யதார்த்த நிலை என்னவென உங்களைப் போலவே நானும் அறியேன். ஆனால், ஊடகங்களுக்கு இருக்கக் கூடாத பண்புகளையெல்லாம் பட்டியல்படுத்தி வைத்திருக்கின்ற நீங்கள், கூஜாத் தூக்கவோ சேறுபுசவோ மாட்டோம் என மாறடிக்கின்ற நீங்கள் இந்த விவகாரத்தில் மௌலவியா தரப்புக்குச் சார்பாக எழுதியிருப்பது தவறு என்பதையே நான் சுட்டிக் காட்டினேன்.
மேலும் பாரமர மக்களாகிய உங்களுக்கு இந்த விடயத்தில் உண்மையையும் தெளிவையும் பெறும் வேகநடையில்தான் அவ்வாறு எழுதியதாகவும் வேறு விளக்கமளித்துள்ளீர்கள். ஆனால் உங்களது செய்தியைப் படித்துப் பார்த்தால் உண்மையை அறிவதற்காகவோ தெளிவு பெறுவதற்காகவோ எழுதப்பட்டதாக இல்லை என்பதை பாமரனும் கூட விளங்கிக்கொள்வான்.
'தஃவாக் காரர்களின் வாயை அடைப்பதற்காகவும் அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும் நம்ம(?) தரீக்கா மௌலளவிமார்களைக் கூட்டிக்கொண்டு வரவேண்டுமென மெலளவியாத் தரப்புக்கு நீங்கள் செய்துள்ள உபதேசம் நடுநிலையானதா..?? பக்கச்சார்பற்றதா..??
உங்களது ரத்தம் கொதிப்பதாக கொக்கரிக்கிறீர்கள். இதே ஊரில் தஃவாக் காரர்களுக்கோ டீ.ஏ.க்காரர்களுக்கோ ஜமாத் இஸ்லாம் காரர்களுக்கோ இப்படி ஏதும் நடந்தால் அதற்கும் உங்களது ரத்தம் கொதிக்குமா???
'பெண் சைத்தான்' என்ற வாசகம் ஒரு வலிமையான குற்றச்சாட்டாகும் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் மோசமான பட்டப்பெயர்கள் சூட்டுவதை இஸ்லாம் தடைசெய்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் உங்களது செய்தியில் நீங்கள் பக்கசர் சார்பாக எழுதியுள்ளீர்கள் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
இறுதியாக நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என நீங்கள் விடாப்பிடியாக இருந்தால் அதற்கு நாம் என்னதான் செய்யலாம்...?

Post a Comment