கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிசு-கிசு கடிதத்தால் அல் பத்ரியாவில் பெரும் பரபரப்பாம்..


சில நாட்களுக்கு முன்னர் அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தற்போதைய உயர்தர வகுப்பு மாணவ, மாணவிகளின் கிசு-கிசுக்கள் அம்பலப்படுத்தப்பட்டள்ளது.

பாடசாலை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இக்கடிதம் திடீரென்று காணாமற் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் சூடு பிடித்திருக்கின்றது. கடிதம் காணாமல் போனமைக்கு ஆசிரியர்கள் தரப்பால் மாணவர்கள் குற்றம் காட்டப்பட, மாணவர் தரப்போ சில ஆசிரியர்களே இக்கடிதத்துக்கு பின்னனி என சந்தேகிப்பதாக தெரிகின்றது.

இக்கடிதம் யாரால் அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆசிரியர்கள் ஆராயாது அலுவலகத்திலிருந்த பணத்தொகை காணாமற் போயிருப்பதாகவும் அதற்கு மாணவர்களே காரணமென்றும் இதைச்சாட்டாக வைத்து கடித விவகாரத்தை ஆசிரியர் தரப்பு மரைக்க முற்படுவதாகவும் மாணவர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சில மாணவர்களும், மாணவிகளும் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மாணவியொருவரின் தந்தை பாடசாலை அதிபரிடம் போய் நடந்ததை விசாரித்ததாகவும், அதிபர் அவர்கள் வழமையான அவர் தோனியி்ல் கடுகடுப்பாக நடந்துகொண்டதாகவும் நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

நடுநிலையாக நன்று இவ்விடயத்தை விசாரிக்கவேண்டிய SDS குழுவினரும் சற்று ஆசிரியர் தரப்புக்கு ஆதரவாக நிற்பதாகவும், முழுப்பழியையும் மாணவர்கள் மீது சுமத்தப்பார்ப்பதாகவும் மாணவர்கள் தரப்பு ஆதங்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும் அல் பத்ரியாவின் தற்போதைய நிலையானது படு பயங்கரமானதாகவே தெரிகிறது. ஒழுக்க விடயத்தில் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக அண்மையில் பாடசாலைக்கு வந்த வட்டாரக் கல்வியதிகாரி கூட கூறியிருந்தார். ஆகவே மாணவர்களை வழிநடாத்தும் ஆசிரியர் குழாம் முன்மாதிரியானவர்களாக, நன் நடத்தையுள்ளோராக இருந்தால் மட்டுமே மாணவர்களை அவர்களால் திரன்பட வழிநடாத்த முடியும். இல்லாதபோது நிலைமை மென்மேலும் மோசமடையவே வழிசெய்யும்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் தகவல்கள் கிடைக்கின்றபோது பக்க சார்பற்றமுறையில் பின்னர் அறியத் தருகின்றோம்.

36 comments:

Ijas said...

தகவல்களை சரியாக அறிந்ததன் பின்னர் ஊர்ஜிதப்படுத்தியே வெளியிட வேண்டும். தங்களது தளத்தில் இடுகையிடப்பட்டுள்ள அல்பத்ரியா விவகாரம் உண்மைக்கு முற்றிலும் புறம்பானதே. எனவே சரியாக தகவல்களை அறிந்து தளத்தில் .இடுகையிடவும்

கஹடோவிட said...

சதோதரர் இஜாஸ் அவர்களி்ன் குருத்துக்கு நன்றி.
மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் தாராளமாக பின்னுட்டத்தினுாடாக சுட்டிக்காட்டப்படலாம். மேலே கூறப்பட்ட ஒரிரு விடயங்கள் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் இருந்தே பெறப்பட்டவை. எனினும் நீங்கள் கூறியதைப்போன்று முற்றிலும் மாற்றமாக இருந்தால் நிச்சயமாக நாம் இவ்விடயத்தைத் சரியான கோணத்தில் வெளிக்கொண்டுவருவோம்.

Anonymous said...

Better not to publish these things in the Internet. whether its real or false. however this is not a matter to be proud.

Its like we show our family(Kahatowita) matters to the whole world and let the whole world laugh at our Family(Kahatowita)

Hey guys lets be a single Family and Build our Family(Kahatowita).

Da'ee said...

Mujahid Moulavi has rightly said that the root of Moral Collapse in our village and in school must be removed to bring about a peaceful Kahatowita and Al Badriya. But he failed to point out the vital problem. True that the latest technology plays a considerable role in collapse in moral ethics of our students. But, there are direct opportunities for the students to practice what they see and hear through these technologies. One such main opportunity is the boys - girls mixed system in schools. I do not know why these Thowheed people, who boast only themselves are the true followers of Qur'an and Hadees, dont take much care in this subject. As da'wa people they the ones to initiate a boys - girls seperated system. Unfortunately, they are the people damaging mostly to Balika Vidyalaya.

Can they come forward with a better answer?

Anonymous said...

What Da'ee said is right. But we are ready to give an answer provided that you are ready to reaveal your real name?

Da'ee said...

Why are you getting angry?

How can you ask for the real name of Da'ee while the publisher of this web site is still hiding? I think this publisher is running this site on behalf of people like you.

First, try to reveal the real names of all the publishers of web sites from our village. (There are more than 7 such sites), Then see how the Da'ee will appear in front of all of you.

Can anyone do this? Looking forward.....

mujahidsrilanki said...

சகோதரர் அவர்கள் நான் பாடசாலை ஆண் பெண் களப்பு பற்றி குறிப்பிடத் தவறியதாகக் குறிப்பிடுகிறார்.ஆண்கள் வேறாக பெண்கள் வேறாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.இந்த ஒழுக்கச் சீரழிவிவில் இந்தக் களப்புக்கும் பங்கு உண்டு என்பதைவிட அதுதான் பிரதான காரணி என்பதிலும் சந்தேகமில்லை.எந்த உண்மையையும் நாம் சொல்லத்தயங்கியதுமில்லை பத்ரியாவில் நடந்த மரியாதைக்காக எழுந்து நிற்றல்,வயதுப் பெண்கள் விளையாட்டுப் போட்டீயில் பங்குபெற இருந்தமை போன்ற கடந்த வருடப்ப பிரச்சனைகள் பற்றியெல்லாம் நாம் அவ்வருடங்களிலேயே மின்பரில் கண்டித்திருக்கிறோம்.

ஆனால் ஊரில் உள்ள பெண்கள் பாடசாலை இஸ்லாம் சொல்லும் பெண்கள் பாடசாலையல்ல என்பதையும் இதே போன்ற தவறுகள் அங்கேயும் நடக்க வாய்ப்புகள் உள்ளன சில தவறுகள் நடந்தும் உள்ளன.என்பதை ஊரில் அதிகமானவர்களைவிட நான் ஆதாரபூர்வமாக அறிந்து வைத்திருப்பதே இது பற்றி நான் மௌனிப்பதற்கான காரணி இது போதும் என்று நினைக்கிறேன் ஆனால் உங்கள் கேள்வி ஞாயமானதே

Anonymous said...

Dear Daa'ee Please read the comment by Mujahid Moulavi. I think it is enough for you.

Anonymous said...

ஊரில் உள்ள பெண்கள் பாடசாலை இஸ்லாம் சொல்லும் பெண்கள் பாடசாலையல்ல. அப்படியாயின்
இஸ்லாம் சொல்லும் பெண் பாடசாலையின் பண்புகளைச் சொல்லுங்கள் முஜாஹித் சிறீலாங்கி அவர்களே....

சப்ரான்

mujahidsrilanki said...

சகல விதத்திலும் ஆண்ககளின் நேரடித் தலையீடின்றி ஒரு ஊரில் பெண்கள் பாடசாலை இயங்குமென்றால் அதனை நாம் இஸ்லாம் கூறும் பெண்கள் பாடசாலை எனக் கருத இடமுண்டு என்பதே உங்கள் கேள்விக்காக என்னால் சுருக்கமாகச் சொல்ல முடிந்த பதில்

Anonymous said...

Dear Mujahith Sri Lanki,

It is impossible in Sri Lanka, not only in Sri LAnka but also in the world. It was not possible even in the period of prophet.... ok

Zafran

Da'ee said...

I agree with what Safran has said. Our beloved prophet also has taken his own time to teach the ladies of his time. Its good if all the activities in a girls' school could be done by the females them selves. What if you don't have female resource persons? Will you stop teaching girls?

Therefore, it does not mean a school with 100% females. Rather, it is a unit which takes meaningful action to minimise male intervention in its course while not doing damages to education activities. So it is the good intention and corresponding activities in order to develop a strong moral system that makes a Islamic Girls' School.

Anonymous said...

"ஊரில் உள்ள பெண்கள் பாடசாலை இஸ்லாம் சொல்லும் பெண்கள் பாடசாலையல்ல".

என பாலிகா பெண்கள் பாடசாலை பற்றி முஜாஹித் சிறீலங்கி வழங்கியுள்ள பத்வா கவலையளிக்கிறது. முஜாஹித் சிறீலங்கி அவர்களே! இஸ்லாம் வெறும் தீர்ப்புக்களை மட்டும் கூறும் மார்க்கமல்ல. அது இதுபோன்ற சமகாலப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளையும் முன்வைக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை.
எமது சமூகத்தில் இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு இது ஹராம், இது ஹலால்: இது பித்அத், இது சுண்ணத்... என வெறுமனே தீர்ப்புக்களை மட்டும் அள்ளி வீசுவது எமது சமூகத்துக்கு விமோசனமாக அமையாது.
முஸ்லிமல்லாத இந்த அந்நிய நாட்டில் அதுவும் முழு கம்பஹா மாவட்டத்துக்குமான ஒரேயோரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக எமது பாலிகாவை கட்டியெழுப்ப ஊரிலுள்ள சில சமூகத் தொண்டர்கள் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்த முயற்சிக்கு நாம் கைகொடுக்க வேண்டுமே தவிர அதனைக் கைகழுவிவிடக் கூடாது. ஆனால் நீங்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் இது ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையல்ல எனத் துணிந்து கூறியுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள வரைவிலக்கணத்தின்படி எமது பாலிகா பாடசாலை இப்போது ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக இல்லாவிட்டாலும் அந்த இலக்கை நோக்கிச் செல்லலாம் அல்லவா?மட்டுமன்றி உங்களைப் போன்ற அறிஞர் பெருமக்களின் ஆதரவும் ஆலோசனைகளும் கிடைக்கும் பட்சத்தில் அந்த இலக்கை விரைவில் அடையலாம் அல்லவா..!? அவ்வாறு அல்லாஹ்வின் அருளால் அந்த இலக்கை அடையும்போது எமதூரிலுள்ள பெண்களின் கல்வியில் அது ஒரு திருப்புமுனையாக இருக்காதா..?

Anonymous said...

அன்பின் சகோதரர்களுக்கு, ஒரு இஸ்லாம் அல்லாத நாட்டின் சட்டத்த்துக்கு உள்ளாகத்தான் எமது பாடசாலைகளும் அமைந்துள்ளன. இருந்தாலும், முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கின்ற ஊர் என்ற வகையில் ஏன் ஊர் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து இந்த பாடசாலை பற்றி பேசி இஸ்லாமிய அடிப்படையில் இதை மாற்ற முடியாது? எதையும் தைரியமாக முன்வைக்கின்ற 'இஸ்லாமிய தஹ்வா நிலையம் ஏன் இது பற்றி கண்டும் காணாதது போல் இருக்கின்றது? இஸ்லாமிய வழியில் ஏன் பாடசாலையை முன்னேற்ற வருவதில்லை?ஒரு ஊரின் தலைமையகம் பள்ளிகள் தான், அதிலும் குர்'ஆண், ஹதீஸ் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி என்ற வகையில் 'தஹ்வா' நிலையத்தின் பங்கு முக்கியமானது.. -muhammadh

Anonymous said...

முஹம்மத் சொல்வது சரிதான். பித்அத் செய்வது கூடாதென்று தனிப்பள்ளி கட்டிட்டு வந்தாங்க. அது மாதிரி பெண்களுக்குத் தனிப்பாடசாலை அமைச்சா நல்லா இருக்கும். பாவம் நடக்கும் இடத்தில் அடஜஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது....

mujahidsrilanki said...
This comment has been removed by the author.
mujahidsrilanki said...

"ஊரில் இயங்கும் பெண்கள் பாடசாலை இஸ்லாம் கூறும் பெண்கள் பாடசாலையல்ல" என்று நான் கூறியதை சிலர் தவறாகப் புரிந்துள்ளனர்."ஆண்களின் நேரடித்தலையீடின்றி…." என்று கூறியதையும் தவறாகப் புரிந்துள்ளனர்.

முதலில் நான் எந்தக் கேள்விக்காக இந்த பதிலை எழுதினேன் என்பதைப் பாருங்கள்.நான் எனது உரையில் ஏன் பாலிகாப் பாடசாலையைக் குறிப்பிடவில்லை என்று ஒரு சகோதரர் கேட்டதற்கு பதில் தருகையிலேயே அவ்வாறு கூறினேன்.உண்மையில் எனது பார்வையில் நான் எனது மகளை இந்த இரு பாடசாலைகளிலும் எதில் சேர்ப்பீர்கள் என்று வினவப்பட்டால் பாலிகாவிலேதான் சேர்ப்பேன் என்றுதான் பதிலளிப்பேன்.காரணம் அங்கே மாணவக் களப்பு இல்லாமையே.அதற்காக அது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையாக மாறிவிடாது.

"ஆண்களின் நேரடித்தலையீடின்றி…." ஒரு பெண்கள் பாடசாலை நபிகளார் காலத்திலும் சாத்தியப்படாது என்று ஒரு சகோதரர் அங்கலாய்த்துள்ளார்.ஒரு பெண்பாடசாலையில் ஆசிரயர்களுக்கு மத்தியில் களப்பு ஏற்பட்டாலும் அது இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்.நிர்வாகத்திற்கும் பெண் ஆசிரியைகளுக்கு மத்தியில் களப்பு ஏற்பட்டாலும் அது இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்.ஆடல்கள் பாடல்கள் வரவேற்புகளுக்கு ஒரு ஊடகமாக பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டாலும் இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்.இதைத்தான் நான் மிக நாகரிகமாக வேறொரு வார்த்தையில் சொன்னேன்.இன்னும் தெளிவாகவும் விளக்கலாம்.முழு முயற்சி எடுத்தால் நாம் இதனை ஒரு முழு இஸ்லாமியப் பெண் பாடசாலையாக மாற்றலாம் இன்சா அல்லாஹ்.

Anonymous said...

'ஒரு பெண் பாடசாலையில் ஆசிரியர்களுக்கு மத்தியில் கலப்பு ஏற்பட்டாலும் இஸ்லாமிய அடைமொழியை இழந்துவிடும்' என்று மொட்டையாக சொல்வதன் மூலம் ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டாட்போல் குறிப்பிடுகிறீர்கள்.
எவ்வாறு இஸ்லாமிய அடைமொழியை இழக்கின்றது என்பதை குர்'ஆண், சுன்னா விலிருந்து விளக்கவும்.
ஷெலூபீன், கத்தர்.

mujahidsrilanki said...

ஊங்களது கேள்விக்கும் எனது பதிலிற்கும் உள்ள சம்பந்தம் புரியவில்லை.

Anonymous said...

முஜாஹித் சிறீலாங்கி அவர்களளே….
சகலவிதத்திலும் ஆண்களின் தலையீடு இன்றி நடக்கும் ஒரு பாடசாலை இஸ்லாமியப் பாடசாலை என கூறியிருக்கிறீர்கள்;. மேலும் ஆண்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடுவதாகவும் கூறியுள்ளீர்கள். அப்படியாயின் உங்களது தௌஹீத் பள்ளியில் பெண்களுக்கு ஆண்கள் வகுப்பு நடத்துவதனால் அது இஸ்லாம் என்ற பண்புகளை இழந்த ஒரு பள்ளிவாசலா?

Da'ee said...

It is good to see the comments are flowing regarding Balika school. it simply means there are lot of interested parties in developing Balika school into "Islamic".

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
mujahidsrilanki said...

"ஆசிரயர்களுக்கு மத்தியில் களப்பு ஏற்பட்டாலும் அது இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்.நிர்வாகத்திற்கும் பெண் ஆசிரியைகளுக்கு மத்தியில் களப்பு ஏற்பட்டாலும் அது இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்.ஆடல்கள் பாடல்கள் வரவேற்புகளுக்கு ஒரு ஊடகமாக பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டாலும் இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்து விடும்."

என்று நான் சொல்லியிருந்தேன் இது எனது சொந்தக் கருத்தல்லவே.எனவே இத்தவறு நான் சொன்ன விதத்தில் எங்கே நடந்தாலும் அது இஸ்லாமிய என்ற அடை மொழியை இழந்தேயாகும்

Anonymous said...

முஜாஹித் சிறீலாங்கி அவர்களே..
உங்களது தஃவாவில் முஅல்லிம்களுடன் முஅல்லிமாவும் குர்ஆன் மத்ரஸாவை நடாத்துகிறார். எனவே இங்கும் ஆசிரியர்களிடையே கலப்பு ஏற்படுவதால் இதுவும் இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்த ஒரு நிறுவனமா?......

Anonymous said...

என்ன….?உங்களுடைய தஃவாப் பள்ளிக்கு வெட்டு வரும்போது அனுமதியின் பின் கொமென்ட போடுறீங்களே..?

NOLIMIT said...

ASSALAMU ALIKUM MUJAHID SIRILANKI, & EDITOR WE R VERY INTEREST TO SEE YOUR CONVERSATIONS

PLEASE CONTINUE.........

Anonymous said...

If people follow this Project, can control at least 70% of discipline in our school.
இந்த முயற்சியானது, எமதூரில் பல ஆண்டு காலமாக, சில நல்ல மனம் கொண்டவர்களுக்காக .............
ஏன் நாம் நீண்டகால முயற்சிகளை செய்யாமல் இருக்கிறோம்?
பெண் பிள்ளைகளை al-badriya m.v சேர்க்காமல் , முதலாம் வகுப்பில் இருந்தே balika வில் சேர்க்கலாமே!
உதாரணமாக ஒவ்வாரு வருடமும் 50 மாணவிகள் al-bariya வில் சேர்க்காமல் , balika வில் சேர்த்தால், இன்னும் 13 வருடங்களில்


முதலில் முற்றாக பெண்களை ஒரு பாடசாலையில் சேர்த்து முடிந்தபின், இரண்டாவதாக இஸ்லாமிய பாடசளையாக்க முடியும் என நம்புகிறேன். ஏன் இதை எலோரும் முயற்சிக்க கூடாது????
shathir

Anonymous said...

If people follow this Project, can control at least 70% of discipline in our school.
இந்த முயற்சியானது, எமதூரில் பல ஆண்டு காலமாக, சில நல்ல மனம் கொண்டவர்களுக்காக .............
ஏன் நாம் நீண்டகால முயற்சிகளை செய்யாமல் இருக்கிறோம்?
பெண் பிள்ளைகளை al-badriya m.v சேர்க்காமல் , முதலாம் வகுப்பில் இருந்தே balika வில் சேர்க்கலாமே!
உதாரணமாக ஒவ்வாரு வருடமும் 50 மாணவிகள் al-bariya வில் சேர்க்காமல் , balika வில் சேர்த்தால், இன்னும் 13 வருடங்களில்
ஆண்டு Al- Badriya M.V Balika
2010 650 xx
2011 600 xx
2012 550 xx
2013 500 xx
2014 450 xx
2015 400 xx
2016 350 xx
2017 300 xx
2018 250 xx
2019 200 xx
2020 150 xx
2021 100 xx
2022 50 xx
2023 ௦௦௦௦ xx+ 650

முதலில் முற்றாக பெண்களை ஒரு பாடசாலையில் சேர்த்து முடிந்தபின், இரண்டாவதாக இஸ்லாமிய பாடசளையாக்க முடியும் என நம்புகிறேன். ஏன் இதை எலோரும் முயற்சிக்க கூடாது????

mujahidsrilanki said...

நோலிமிட் என்ற பெயரில் எழுதும் சகோதரருக்கு எனது நன்றிகள்.


சகோதரர் சாத்திருக்கு!

முதலில் முற்றாக பெண்களை ஒரு பாடசாலையில் சேர்த்து முடிந்தபின்இ இரண்டாவதாக இஸ்லாமிய பாடசளையாக்க முடியும் என நம்புகிறேன். ஏன் இதை எலோரும் முயற்சிக்க கூடாது????


நீங்கள் விளங்கி எழுதுகிறீர்கள் என்பதால் நான் உங்கள் எழுத்துக்களை மிக மதிக்கிறேன்.நிச்யமாக நீங்கள் சொல்வதில் நான் முழுமையாக உடன்படுகிறேன்.ஆனால் அதற்கான திட்டங்களை உடன்பாடுள்ள அனைவரும் இப்பொழுதிருந்தே முயன்றால் நிச்சயம் கைகூடும் இன்சா அல்லாஹ்.



இன்னொரு சகோரர் இப்படிச்சொல்லியுள்ளார்

முஜாஹித் சிறீலாங்கி அவர்களே..
உங்களது தஃவாவில் முஅல்லிம்களுடன் முஅல்லிமாவும் குர்ஆன் மத்ரஸாவை நடாத்துகிறார். எனவே இங்கும் ஆசிரியர்களிடையே கலப்பு ஏற்படுவதால் இதுவும் இஸ்லாமிய என்ற அடைமொழியை இழந்த ஒரு நிறுவனமா?......

சகோதரரே!
பத்ரியாபாடசாலைக்கு சார்பாக வாதாடுவது போல் இருக்கிறது.ஆனால் பாலிகாவிற்கு சார்பாக எழுதவந்தீர்கள் என்பதை கொஞ்சம் கூட மறக்காமல் எழுதுங்கள் பதில் எழுதுகிறேன்

Anonymous said...

It is It is irritating me that the blog editor has has removed some comments. why don't you publish these comments. Do you have any personal agenda in running this site?

Shathir said...

சகோ. முஜாஹித்
என்னைப் போல சிலர் சொல்வதை ஊரார் என்றுக் கொள்வதில்லை. காரணம் பணம், அந்தஸ்த்து, போட்டி, பொறாமை. நீங்கள் எமதூரிட்கு புதியவர். ஆனால், ஊரின் வரலாறை நீங்கள் ஆதார பூர்வமாக படித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள். எனது கொள்கையானது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும், உங்கள் நிகழ்ச்சிகளையும் வார்த்தைகளைக்யும் மதிக்கிறேன். மார்க்கத்தில் பல பிரிவாக பிரிந்துள்ள நாம், என்றோ ஒருநாள் ஒன்று சேர்வது உறுதி. it will not call thareeqa or dha'waa or with other .... It is islam. பலர் பலவாறு மார்க்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான். நாம் இருப்பது ஒரு இஸ்லாமிய நாடு அல்ல. இருந்தாலும் எமது ஊர் ஒரு முஸ்லிம் ஊர். இதிலே maximum around 5000 பேர் இருப்பார்கள். பல பிரச்சனைகள். மது, விபச்சாரம்(பல வகையான) ,பெற்றோரை மதிக்காமை, பெருமை, மற்றும் சிறு பாவங்களை கண்டு கொல்லாமை (உ + ம் cigarette smoke, படம் பார்த்தல், பெண்கள் பாதைகளில் அதிகம் நடமாடல், சிறுவர்கள் இப்போதே கரண்டை காலுக்கு கீழ் ஆடைகளை அணிதல், கடைகளில் பொருட்களில் கலப்படம்,... இப்போது பல வெப்தளங்கள் without contacts, ஊரின் எல்லையில் உள்ள சார்லங்கா என்ற இடத்தைப்பற்றி ஊர் மக்கள் சிந்திக்காமை. Hope you will do good for our village. please talk about these with dha'waa masjid board. and try to tell them to include some youngsters to the board of masjid. then, they can do something for society through masjid. many are there for do good.
i thought of contact you personally, now decided to contact you as this. i think this is a good way to share our hopes.
shathir.

mujahidsrilanki said...

உங்கள் நல்லெண்ணம் தொடற எனது பிரார்த்தனைகள் உண்மையில் புரிந்துணர்வோடும் தப்பெண்ணங்களின்றியும் கருத்துச் சதந்திரத்தை மதிக்கும் உணர்வோடும் பழகும் சமுதாயமாக நமது ஊர் மாற வேண்டும்

NOLIMIT said...

ASSALAMU ALIKUM, MUJAHID & EDITOR,

WE MUST STOP THOSE HBBITS FROM OUR SOCIETY, I MEAN (SMOKING, ALCHOHOL,BABUL,BLUEFILM,TAMIL FILMS AND LOITERING). OTHERWISE WE CANT CREAT A BRIGHT ISLAMIC YOUTH. INSHA ALLAH WE CAN DO JIHAD AGAINST THESE THINGS.

NOLIMIT said...

ASSALAMU ALIKUM,

our village mosque trustees & organisors can solve this probloms, throug meeting those smoking,alcaholic,....etc peoples & finding the resion for using them and give advice to them in a islamic manner. or

our village mosque trustees can come to gethar and create a unity organization to solve these major probloms

CNC Job Offers said...

Yes Mr. Nolimt, what u have said is correct. It is the resposibility of three masjths in our village as well as all the people who are interested in the progress of Kahatowita. Jazakallah for your kind comments. we hope more from you.

Anonymous said...

Assalamu alaikum guys!
Each and every body must work together for our kahatowita. no need to fight with the name of islam, just explain people about the situation of our youngsters habbits. Allah will help us. If we missed to reform, Allah will destroy us.
fawaz.
Maldives.
I wish all my village people to have a bright and good future.
Specialy thanking to this site editor for still make us touch with our Village even through internet.
Make this site more honesty and trusty, allah will help you.
My regards, and salam to all readers of the site, and my village friends.

Post a Comment