கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிசு கிசு கடிதம் - கைகலப்புடன் முடிவு


கிசு கிசு கடிதம் தொடர்பில் விசாரணைக்காக பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் இன்று பாடசாலைக்கு வந்துள்ளனர். இதன்போது ஒரு பெற்றார் ஒரு மாணவனைத் தாக்கியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் வரவழைக்கப் பட்டிருந்தனர். பின்னர் நிலைமை சீருக்கு வந்ததாகவும் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் பாடசாலையில் நடைபெறுவதாகவும் நமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

மாணவர்களுக்குப் பிண்ணணியில் சில வெளிச்சக்திகள் இருப்பதாகவும் அறிய முடிகின்றது. அலுவலகத்திலிருந்து பணம் திருடப்பட்ட கதை பொய்யென்பதை பாடசாலை வட்டாரம் ஏற்றுக் கொண்டுள்ளதாம். ஆனாலும் இக்காரணத்தை மையமாக வைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரிப்பதற்காக ஆசிரியர்கள் இரவோடிரவாக அம்மாணவர்களின் வீடுகளிற்கு சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. திஹாரிய மாணவனின் வீட்டிற்கு இரவு பன்னிரண்டு மணிக்குப் போய் அம்மாணவனின் பெற்றோரை சந்தித்ததாக சில மாணவாக்ள் சொல்லியுள்ளனர். அதாவது பணத்திருட்டு விவகாரம் பொய்யென ஆசிரியர் தரப்பு தற்போது ஏற்றுக் கொண்டாலும் பணத்தொகை காணாமல் போனதை மையப்படுத்தியே சில மாணவர்களை ஆசிரியர்கள் விசாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டுக் கூறுவது அதிர்ச்சியான விடயம் என பலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எது எவ்வாறாயினும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் எல்லைமீறிச் சென்றுள்ளதாகப் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். இதுவரை இப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வும் பெறப்படவில்லை.

என்ன நடக்குதென்னு ஒன்னுமே புரயுதுல்லப்பா…
கிசு-கிசு கடிதம் இணைப்பு 01

3 comments:

Anonymous said...

இந்தப்பிரச்சினைக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும்குறைசொல்லியுள்ளீர்கள்.இப்பிரச்சினைக்குப் பின்னால் ஒரு ஆசிரியர் மறைந்துள்ளதாகப் பலரும் சொல்கிறார்கள். தகைமையற்ற ஒருவரை சீனியர் மாணவத்தலைவராக நியமித்தமையே மூல காரணம். ஆசிரியர்கள் சரியாக நடந்தால் மாணவர்கள் சரியாக நடப்பார்கள்.

Anonymous said...

இந்தக் கட்டுரை முழுக்முழுக்க மாணவர்கள் சார்பானது. ஆசிரியர்கள் தரதப்பில் முழுக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளீர்கள். நடுநிலமையோடு செயற்படல் வேண்டும்

Anonymous said...

மேலே சகோதரர் சுட்டிக்காட்டியதைப்போன்று இந்தஆக்கம் நடுநிலமையற்ற ஆக்கமாக எனக்குப் படவில்லை ஏனெனில் சற்றுவித்தியாசமாக இருதரப்பாரையும் குற்றம் காணும்தொனியில் எழுதப்பட்டுள்ளது போன்று தோண்றிகிறது. பிரச்சினைக்குப் பின்னால் ஊர்மக்களின் வாய் அலசல்களைப் பார்க்கும்போது இன்னும் பெரிய வ்ன்டவாலங்கள் எல்லாம் வெளிக்கு வரும்போல தெரிகின்றது.
அது சரி மேலும் இதுசம்பந்தப்பட்ட விடயங்களை உங்களின் வெப் சைட்டினுடாக எதிர்பர்க்கிறோம்.

Post a Comment