“ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும்” -மௌலவி முஜாஹித்-
வழமாயக இருவாரங்களுக்கொரு முறை தவ்ஹீத் பள்ளியில் இடம் பெற்று வரும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய முஜாஹித் மொளவி தற்போது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள் பற்றிப் பேசினார். அண்மைக் காலமாக பத்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறுகின்ற சில சம்பவங்களே இவ்வுரைக்குக் காரணமாகும். மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக சமூக சூழல், வீட்டுச் சூழல்,சிறந்த முன்மாதிரிகள் போன்றன பிரதான காரணிகளாகவிருக்கின்றன என்று பேசிய அவர் தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியும் மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு பெரும் பங்குவகிப்பதாகக் கூறினார். ஆசிரியர் பகுதியும் மானவர் பகுதியும் ஒழுங்குறவிருந்தாலேயே கல்வி நடவடிக்கைகள் திறன்படவிளங்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்பதை விளக்கினார். இந்த விடயத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு திட்டமிட்டு செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் இன்றய இளைஞர்கள் தமக்கு முன்மாதிரிகளாக இப்றாஹீம் (அலை), மூஸா (அலை) , யுஸுப்(அலை), குகை வாசிகள் போன்றோரை எடுத்துக்கொள்ள வேண்டும் எனபதை தகுந்த வரலாற்றுச் சான்றுகள் மூலம் உணர்த்தினார்.
1 comments:
PLEASE TELL US WAT HAPPENED IN THE SCHOOL ....DONT JUST SAY ...... OLUKKA VEELCHCHI....
YOU MUST NOT UNEARTH THE NAMES BUT JST PUT A NICK NAME AND TELL THE INCIDENTS......
MUSLM-EAST.
Post a Comment