கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

புனித பூமி அதன் வரைவிலக்கணம் என்ன? அதை யார் பிரகடனப் படுத்துவது?



இலங்கை ஜாமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை lankamuslim.org தொடர்பு கொண்டு தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பாக எழுத்து பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் உரையாடியபோது அவர் எமக்கு வழங்கியுள்ள தகவல்களை உங்களுக்கு தருகிறோம் : உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் : புனித பூமி என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உண்டு ஆனால் இங்கு தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் பெளத்த புனித பூமியில் அமைத்துள்ளது என்று கூறி அதை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது. இந்த விடயத்தில் ஒரு பிரதான கேள்வி இருக்கிறது. புனித பூமி என்றால் என்ன ? அதன் வரைவிலக்கணம் என்ன ? ஒரு மதத்தின் புனித பூமி என்பது அந்த மதத்தின் ஸ்தாபகரால் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கவேண்டும் .

இஸ்லாத்தில் அல்லாஹ்வின் இறுதித் தூதர் பிரகடனப் படுத்திய மூன்று இடங்கள் இருக்கிறது. அந்த மூன்றும்தான் உலகில் முஸ்லிம்களின் புனித இடங்கள் அதன் புனிதத் தன்மையை முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள் அது முஸ்லிம்களுக்கு என்று தனியாக இருக்கும் அதேபோன்று மற்ற சமூகங்களுக்கும் புனித பிரதேசங்கள் இருப்பதும் அது அவர்களுக்கு என்று தனியாக இருப்பதும் ஆச்சேபனைக்குரிய விடையமல்ல.

ஆனால் இங்கு உள்ள பிரச்சினை புனித பூமி என்பதற்கு என்ற வரைவிலக்கணம் என்பதுதான். முஸ்லிம் சமூகத்திடம் புனித பூமி என்பதற்கு வரைவிலக்கணம் உண்டு மக்கா , மதீனா , பைத்துல் முகத்திஸ் ஆகியன அல்லாஹ்வின் இறுதித் தூதரினால் பிரகடனப் படுத்தப்பட்டவை உலகில் நான்காவது ஒரு இடத்தை முஸ்லிம் சாம்ராஜித்யத்தின் கலீபா கூட புனித பூமியாக , பிரதேசமாக பிரகடனப் படுத்த முடியாது . இஸ்லாத்தில் மூன்று இடங்களும் அல்லாஹ்வின் இறுதித் தூதரினால் பிரகடனப்படுத்தப் பட்டதால் அதன் புனித தன்மை உலக அழிவு வரை இருக்கும் . ஒரு மதத்தின் புனித பூமி என்பது அதன் ஸ்தாபகரினால் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் காலத்துக்கு காலம் ஒவ்வொருவரும் புனித பூமி என்று பிரகடனம் செய்யப்போனால் ? இன்று இலங்கை புத்தரின் தேசம் என்று சுவரொட்டி ,விளம்பரங்கள் செய்யப் படுகிறது , நாளை முழு இலங்கையும் புனித பூமி என்று பிரகடனம் செய்தால் இங்கு இருக்கும் மற்றவர்கள் என்ன செய்வது ? ஆகவே புனித பெளத்த பூமி என்பதை யார் பிரகடனப் படுத்துவது ? அதன் வரைவிலக்கணம் என்ன ? என்பது தெளிவாக இருக்கவேண்டும் .
புத்தர் உலகில் இந்தெந்த இடங்கள் புனிதமானவை என்று கூறி இருந்தால் அங்கிருந்து நாங்கள் வெளியேறுவது சரி அங்கு எமக்கு உரிமை கோரமுடியாது ஆனால் காலத்துக்கு காலம் நினைத்தவர்கள் எல்லாம் இது புனித பூமி என்று பிரகடனப் படுத்தப் போனால் அது எந்த வரையறைகளையும் கொண்டிருக்காது அப்படி செய்வது மதத்தை கௌரவப் படுத்தாது.

தம்புள்ள பிரதேசத்தின் குறித்த பகுதி 1982 ஆம் ஆண்டு புனித பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டது என்றால் அங்கு அதற்கு முன்பிருந்தவர்கள் எல்லாம் வெளியேறிப் போவதா ? -( தம்புள்ள புனித பூமி என்பது பின்னர் ரத்து செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது )- அதேபோன்ற சட்டம் 2013 ஆம் ஆண்டிலும் 2020ஆம் ஆண்டிலும் வெவ்வேறு இடங்களில் கொண்டுவந்து புனித பூமி என்று பிரகடனப் படுத்தினால் இது எங்கு போய் முடியும் ? இதன் நடைமுறை என்ன என்பதுதான் பிரச்சினை .

ஆகவே இந்த பிரச்சினையின் ஆணிவேர் தொடர்பாக எல்லா மத தலைமை பீடங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் புனித பூமி என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் வேண்டும் அல்லது இந்த நாட்டில் எங்குவேண்டுமானாலும் இடங்களை நாளை புனித பூமி என்று பிரகடனப் படுத்துவார்கள் அங்கிருப்பவர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் , நாளை முழு நாடும் புத்தரின் தேசம், புனித பூமி என்று பிரகடனப் படுத்தினால் நாட்டில் இருக்கும் மஸ்ஜித்துக்கள் , கோவில்கள் , தேவாலையங்கள் எல்லாம் உடைக்க வேண்டிவரும் அப்படியா ?!!
இஸ்லாம் இந்த விடயத்தில் உறுதியானதும் தெளிவானதுமான தன்மையை கொண்டுள்ளது, முழு உலகமும் இஸ்லாத்தின் கீழ் வந்தாலும் எவரும் நான்காவது புனித பூமி என்று ஒன்றை பிரகடனப் படுத்த முடியாது. புனித பூமி என்பது வணக்கத்துடன் தொடர்பானது அதை நோக்கி பயணிப்பது கூட ஒரு வண்ணக்கம் ஆகவே அந்த பிரகடன அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மட்டும் உரியது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு .அதேபோன்று புனித பூமி விடயத்தில் பெளத்த மதத்தில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்கிறதா ?

புனித பூமி என்றால் மற்ற சமூகத்தின் வணக்கஸ்தலங்கள் அங்கு இருக்க முடியாது என்பதல்ல பிரச்சினை. எது புனித பூமி என்பதும் அதன் வரைவிலக்கணம் அதை பிரகடனப் படுத்துவதற்கான வழிமுறை என்ன ? என்பதும்தான் பிரச்சினை. புனித பூமி என்று அரசாங்கம் சட்டம் இயற்றுவது மாத்திரம் போதுமா ? அப்படியானால் புனித பூமி பிரகடனத்தின் ஊடாக மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்றவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு சமூகத்திற்கு அநியாயம் செய்ய நினைத்தால் அந்த சட்டத்தை பயன்படுத்த முடியும். இது மதத்தை இழிவு படுத்தும் வேலையாகத்தான் அமையும் இது மதத்தை கௌரவ படுத்தும் வேலையல்ல.

எங்கள் சமூகத்தில் சிலரிடம் ஒரு பயம் இருக்கிறது. நாம் அனுசரித்து போகவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் . காரணம் எங்களிடமும் புனித பிரதேசங்கள் இருக்கிறது வெளியார்கள் வந்தால் அங்கு அவர்களுக்கு அனுமதிப் வழங்குவீர்களா ? என்று மற்றவர்கள் கேட்கிறார்கள் ? என்று கூறுகிறார்கள். அதற்கு ஒரு விளக்கத்தை தாங்களே விளங்கிக்கொண்டு பயம் கொண்டுள்ளார்கள் . இது பயப்பட வேண்டிய விடையமல்ல புனித பூமி, புனிதப்படுதல் என்று ஒரு விடயம் உண்டு. அதை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் அதன் முறை என்ன என்பதுபற்றி விளக்கம் வேண்டும் இஸ்லாத்தின் அது தெளிவாக உள்ளது அந்த முறை பௌத்தர்களிடம் இருந்தால் அவர்கள் கூறும் புனித பிரதேசத்தை நாங்கள் கௌரவிக்க தயார். இந்த விடயத்தில் பயம்படவேண்டிய அவசியம் இல்லை .

அல்லாஹ்வின் இறுதித் தூதர் மூன்று இடங்களை உலகில் பிரகடனப் படுத்தியுள்ளது போன்று புத்தரும் பிரகடனப் படுத்தி இருந்தால் அதை நாங்கள் கௌரவிக்க தயார். அங்கிருந்து வெளியேற தயார் சரியான வரைவிலக்கணங்கள் வரையறைகள் வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாம் தெளிவாக உள்ளது. என்று தெரிவித்தார் .

2 comments:

Anonymous said...

WHY DONT YOU CALL THESE MONKS SPECIAALY HEAD OF MONKS ( BIKKU ) FOR A DEBATE ON THE SUBJECT " WHAT IS HOLY LAND OR DID BUDHDHA MAKE DAMBULLA AS A HOLY LAND OR .....ETC .ETC....""

ANYONE, SPECIALLY ISLAMIC MOVMENTS LIKE JAMATHE ISLAMI, THAWHEED JAMAATH , THABLEEK .....ECT.....

READY WITHOUT FEAR ??

Anonymous said...

WHY DONT YOU CALL THESE MONKS SPECIAALY HEAD OF MONKS ( BIKKU ) FOR A DEBATE ON THE SUBJECT " WHAT IS HOLY LAND OR DID BUDHDHA MAKE DAMBULLA AS A HOLY LAND OR .....ETC .ETC....""

ANYONE, SPECIALLY ISLAMIC MOVMENTS LIKE JAMATHE ISLAMI, THAWHEED JAMAATH , THABLEEK .....ECT.....

READY WITHOUT FEAR ??

Post a Comment