கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பரிதாப நிலையில் நமது பாடசாலையில் (பாகம் 01)



கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுல் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு குறிப்பிடத் தக்களவிலான அறிவுப் பாரம்பரியமும், சிறப்புக்களும் உண்டு. பாடசாலையின் முன்னைய கல்வியியற் சாதனைகளும் புகழும்தான இன்றுவரை பாடசாலையின் பெயரையும் காப்பாற்றியிருக்கின்றது என்று கூறினாலும் அது மிகைப்படுத்தலகாது. ஆனாலும் பாடசாலையின் அண்மைய நிலவரங்கள் அவ்வளவு வரவேற்புக்குறியனதாகவில்லை என்பதோடு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாரிய பின்னடைவுகளை எதிர்வு கூறுபவையாகவும் அவைகள் கானப்படுகின்றன. எனவே இவ்வாறான பொது விடயங்கள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது ஒரு ஊடகத்தின் அதீத பொறுப்பு என்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் நமது கருத்துக்களை இங்கு பிரஸ்தாபிக்கலாம் என நினைக்கின்றோம்.

பாடசாலையின் பிரதான குறைபாடு
பாடசாலையின் குறைபாடாக பல அம்சங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும் அவற்றுள் மிகப் பிரதானமானதும் அவசரமாய் தீர்வு காணப்பட வேண்டியதுமானதாக விளங்குவது ஆசிரியர் பற்றாக்குறையாகும். சுமார் 17 ஆசிரியர்ள் பாடசாலைக்குத் தேவைப்படுகின்றனர். இக்குறைபாட்டின் காரணமாக பாடங்கள் உரிய நேரங்களில் நடைபெறுவதில்லை. க.பொ.த தர வகுப்புக்களுக்கும் சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று பாடங்களே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் சில வகுப்புக்கள் நேரகாலத்தோடு வீடுகளிற்குப் போய்விடுவதாகவும் சொல்லப்படுகின்றது. சில ஆசிரியர்கள் தாம் நினைத்த மாத்திரத்தில் இடைக்கிடையே விடுமுறை எடுப்பதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் தமது சொந்த லீவுகளைத்தான் இவர்கள் எடுப்பதாக நியாயம் கூறப்பட்டாலும் பாடசாலையில் ஆசிரியர் குறைபாடிருப்பதனால் மாணவர் நலன் கருதி சற்றுத் தாராளத் தண்மையோடு இவர்கள் நடந்து கொண்டால் என்ன?என்று பலரும் கேள்வியெழுப்புகின்றனர். இது சம்பந்தமான தகவலை எமது சகோதர இணையத்தளமொன்றிலும் காண முடிகின்றது.

"தனது மகனின் சுகவீனம் காரணமாக பாடசாலை விடயங்களை முழுமையாகக் கவனிக்க முடியாத நிலைக்கு அதிபர் தள்ளப்பட்டுள்ளதால் இந்நிலை மேலும் மோசமடைந்தள்ளது www.kahatovita.tk "

எமது பாடசாலையின் அண்மைய நிலைதொடர்பான மேலும் கவலைக்குறிய பல தகவல்களை வாசகர்களாகிய உங்களுக்கு அறியத்தரவுள்ளோம். அல்பதிரியாவை வீழ்ச்சியிலிருந்து காப்பதற்க்குரிய ஆக்கபுர்வமான கருத்துக்களை நீங்களும் இத்தளத்தினூடாக பகிர்ந்துகொள்ளலாம்.

0 comments:

Post a Comment