கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது.


அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கின்னஸ் அமைப்பு மறுஆய்வு செய்தது. அதில் அபுதாபி கட்டடத்துக்கு முதலிடம் தரப்பட்டது.

பைசா கோபுரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக சிறிது சாய்வது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியப் போகும் அபுதாபி கட்டடமே சாய்வாக கட்டப்பட்டுள்ளது.

160 மீற்றர் உயரம் கொண்ட அதில் ஐந்து நட்சத்திர விடுதி அமையப் போகிறது. ஏற்கனவே, துபாயின் புர்ஜ் கலீபா கோபுரமே உலகிலேயே உயர்ந்த கட்டடம் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment