கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குடும்பமாக வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள்! _

கல்கிசை, நீர்கொழும்பு, சீதுவை ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சீதுவை கடற்கரையோரத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவரை நேற்றுமுன்தினம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, பொலிஸார் பல்வேறு தகவல்களை நீதவானிடம்தெரிவித்தனர்.

கரையோரப் பகுதிகளில் இவ்வாறானவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அதனைத் தடுப்பதற்காக தனியான பொலிஸ் குழுவினர் இயங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோன்று, அவர்கள் தெரிவித்த மற்றுமொரு கருத்து அதிர்ச்சியடைய வைத்தது. தாம் காணும் ஓரினச் சேர்க்கையாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுபராயத்தினரே என்பதுதான் அது.

பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இருவரும் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பது மற்றுமொரு செய்தி.

கல்கிசை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளின் கரையோரங்களில் ஏராளமான மதுபான விடுதிகளும் உல்லாசத் தளங்களும் காணப்படுகின்றன. சமூக சீர்கேடான நடவடிக்கைகள் அதிகரிக்க இவையும் காரணங்களாகலாம்.

நீர்கொழும்பில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேரிப்புறங்களில் வாடகைக்கு வீடு வாங்கி, வாழ்ந்து வருவதாகவும் தினமும் அங்கு சல்லாபங்கள் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு வேளைகளில், கடற்கரையோரமாக நடமாடிவரும் இவர்கள் சாதாரண பொதுமக்கள் அவ்வழியாகச் சென்றால், வற்புறுத்தி உறவுக்கு அழைப்பதாகவும் இல்லாவிடின் பணம் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இவர்களிடம் சிக்கும் பாடசாலை சிறுவர்கள் சிற்றின்பத்தின் தாக்கத்தினால் நாளடைவில் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு நீண்டகால சமுதாயச் சீரழிவை ஏற்படுத்துகிறது.

பொலிஸார் மட்டுமே தனித்து இதனைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டியது அவசியமாகும். ஓரினச் சேர்க்கைக்கு சிறுவர்களும் இளைஞர்களும் அடிமையாவது தடுக்கப்பட வேண்டியதவசியம். மேற்குலக நாடுகளில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போன்ற கலாசார பாரம்பரியம் கொண்ட வளர்முக நாடுகளில் ஓரினச் சேர்க்கையானது எதிர் விளைவுகளையே தரக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -ஆர்.நிர்ஷன்

0 comments:

Post a Comment