உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் 8 அணிகள்
தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன.
இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் ஜப்பான் - பராகுவே அணிகள் மோதின. ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இருஅணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. அதனால் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் 'பெனால்டிக் கிக்' தரப்பட்டது. இதில் ஜப்பான் வீரர் ஒருவர் கோல் அடிக்கத் தவறியதால் பராகுவே 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
நள்ளிரவு நடைபெற்ற ஸ்பெயின் - போர்ச்சுகல் இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்துடன் நாக்-அவுட் சுற்றுகள் முடிவுக்கு வந்தன.
இன்றும் நாளையும் ஓய்வு நாட்கள் என்பதால், நாளை மறுதினம் ஜூலை 2 ஆம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.
காலிறுதியில் மோதும் அணிகளின் விவரம் வருமாறு
பிரேசில் - நெதர்லாந்து
அர்ஜெண்டினா - ஜெர்மனி
உருகுவே - கானா
பராகுவே - ஸ்பெயின் - ஆகிய அணிகள் மோதுகின்றன.
காலிறுதிக்குள் நுழைந்துள்ள அணிகளில் நான்கு நாடுகள் தென் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவை. 3 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து கானா மட்டுமே காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. பராகுவே அணியிடம் ஜப்பான் அணி நேற்று வீழ்ந்தால் ஆசியா கண்டத்தில் இருந்தும் எந்த அணியும் காலிறுதிக்குள் நுழையவில்லை.
-சிவாஜி டிவி
0 comments:
Post a Comment