கிளை 07: வஞ்சமில்லா வதனம்
புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
............................................................................................................................அது ஒரு வயல் வெளி. ஒரு தலையில் இரு வகிடுகள் போல் அதில் இரண்டு பாதைகள். ஆங்காங்கே ஓரிரு வீடுகள்.
சில வேளை அது திரிசு நிலம், அப்போது அது எங்கள் மைதானம்,
சில வேளை அது சதுப்பு நிலம், அப்போது அது எங்கள் வயல் நிலம்,
சிலபோது அது எங்கள் நீச்சற் குளம்.
பற்றைப் புதர்களுடன் சேர்ந்த நாணற் புற்கள் தென்றலின் சீண்டலால் வலைந்து நெலிந்து ஆடும் ஆட்டத்தைக்காண அந்திகள் பல தேவை. (என்றைக்கும் பசுமையாக அந்த புற்றரையை ரசிக்கும்). வஞ்சமமேயில்லா அந்த இயற்கைப் பசுமைக்கு ஆண்டுக்கொருமுறை வந்து செல்லும் ஆற்று வெள்ளம் சேறு பூசிச்ச செல்வது மனதுக்குக் கொஞ்சம் வேதனைதான்.
புற்களுக்கு வேண்டுமென்றால் படிந்த சேறு மறு மழையில் கரைந்து விடும். ஆனால் எங்கள் மக்களுக்கு அது எத்துனை காயங்களை விட்டுச் செல்கின்றது. பல வருடங்கள் புன்பட்ட எங்கள் நெஞ்சங்கள் பண்பட்டுவிட்டன. அது எதையும் தாங்கும் இதயமொன்றை எங்களுக்குள் உருவாக்கிட்டு. அந்த வீதியில் நின்று பார்த்தால் தெரிவதெல்லாம் தென்னை மரங்களும், பலா மரங்களும் சேர்ந்த ஒரு சோலைதான். அது ஒரு நந்தவனமோ அல்லது சரணாலயமோ என்றெல்லாம் சிலர் எங்க@ரின் முகப்பைப் பார்த்து பிரமித்ததுண்டு. அந்த வரப்புகளுக்கு மேல் ஓர் எட்டு வைக்கும்போது ஒரு பிரமை எங்களுக்கு. ஏனென்றால் வரப்புக்களையும் வேளாண்மைகளையும் எங்களுக்கு அறிமுகஞ் செய்து வைத்ததே இந்த வயல்வெளிதான்.
என்னது செய்வது செயற்கைகளையே ரசித்துப் பழகிவிட்ட இன்றைய மனிஷருக்கு இந்த இயற்கைகளை ரசிக்கப் பிடிக்கவில்லை போலும்.
0 comments:
Post a Comment