கொம்பனத்தெரு பகுதி பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கொழும்பு, கொம்பனத்தெரு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.
மேலும் இது சம்பந்தமாக தெரியவருவதாவது, தொழுகைகளுக்காக பள்ளி வாசல்களுக்கு வருவோர், பள்ளி வாசல்களின் வருமானம், சொத்து விபரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குறித்த பள்ளிவாசல்களுக்கு உதவி கிடைக்கப் பெறுகின்றதா என்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
சிவில் உடையணிந்த படை அதிகாரிகளே இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான ஆகியோருக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(R.A)
0 comments:
Post a Comment