கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட காதிரிய்யா தரீக்காவிற்குள் குழுச்சண்டை

கடந்த சில வருடங்களாக கஹட்டோவிடாவைச் சேர்ந்த ஒருவர் காதிரிய்யாத் தரீக்காவிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதையும், குறித்த தரீக்காவின் முரீதுகள் யாரும் அந்நபருடன் எவ்விதத் தொடர்பையும் வைக்கக் கூடாதெனவும் கதிரிய்யாத் தரீக்காவின் தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்ததையும் பலரும் அறிந்திருப்பர். சுpல வருடங்களாக இத்தடையுத்தரவால் விரக்தியடைந்திருந்த இந்நபர் சென்ற ஓரிருவாரங்களாக அவரின் சில முஹிப்பீன்களை வைத்துக்கொண்டு குர்ஆன் விளக்க வகுப்பு நடாத்தியிருக்கிறார்போலும். இந்த வகுப்புக்கு எதிர்பார்த்ததையும் விட மக்கள் ஆதரவு ஏற்பட்டதால் இதையறிந்த கஹட்டோவிட காதிரிய்யா தக்கியா வட்டாரம் தமது அதிரடி முடிவுகளை வெளியிடுமுகமாக இந்நபரின் வகுப்புக்கு தமது தக்கியாவைச் சார்ந்த யாரும் செல்லக் கூடாதென சென்ற வெள்ளிக்கிழமை காலை புர்தா, ராதிபு வைபவத்தைத் தொடர்ந்து தெரிவித்துள்ளது. இவ்வறிவிப்பால் நொந்துபோன அந்த நபரின் ஆதரவாளர் சிலர் அதே வெள்ளியன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தமது தரீக்காவைச் சேர்ந்த சிலருடன் பெரிய பள்ளிவாயலில் வைத்து வாக்குவாதப்பட்டிருக்கின்றனர். கலவரமுற்ற இப்பிரிவினர் காதிரிய்யாத் தரீக்காவின் கஹட்டோவிட கலீபாவின் வீட்டுக்குச்சென்று ‘யாமுஹியத்தீன் விவகாரம்’   தொடர்பில் வினவியுள்ளனர். இதற்குப் பதிலளித்த அந்தக் கலீபா கப்ரில் முன்கர் நகீர் உனது ரப்பு யார் என்று கேள்வி கேட்டால் யாமுஹையத்தீன் என்று கூறுவது தவறில்லை என்று தமது தரீக்காவின் தலைவர் கட்டளையிட்டிருப்பதாகவும் இதைத் தமது தரீக்காவின் பிள்ளைகளுக்கு மட்டுமே தாம் கூறியிருப்பதாகவும் வேறெவருக்கும் இதை நாம் கூறவேண்டிய அவசியமில்லையெனவும் இதற்கு ஆதாரபூர்வமான புத்தகம் வேருவலையில் உள்ளதாகவும் அதைப் பார்த்துத் தாம் தெளிவு பெற்றுவிட்டு வேருவிலைக்கு அனுப்பிவிட்டதாகவும் யாருக்கும் அதைக்காட்ட வேண்டிய அவசியமில்லையெனவும் அறிவு பூர்வமாக பதில் சொல்லியுள்ளார். கலீபாவைச்சந்திக்கச் சென்ற இக்குறிப்பிட்ட குழுவில் ஷதுலிய்யா மற்றும் பாதிபிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஒரு சிலரும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஒரு கட்டத்தில் ‘நாம் தரீக்காக்கள் எல்லாம் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். தரீக்காக்களை ஒன்றினைத்து தரீக்காக் கவுன்சில் அமைத்துள்ளோம். எனினும் நீங்கள் கூறும் இந்த யாமுஹையத்தீன் கருத்து இஸ்லாமிய அகீதாவிற்கு மாற்றமாக உள்ளதே என்றும் கேட்டுள்ளார்’. இதற்குப் பதிலளித்த கலீபா தமது கருத்தில் தாம் உறுதியாகவுள்ளதாக கட்டன்ரைட்டாக பதில் சொல்லியுள்ளார். தொடர்ந்தும் குழப்பமடைந்த இக்குழுவினர் கலீபாவின் இக்கருத்துக்களை ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும் இந்த யாமுஹையத்தீன் விவகாரத்தை ஜம்இய்யதுல் உலமாவுக்கும், வக்பு சபைக்கும் அனுப்பி இது விடயத்தில் இஸ்லாமியத் தீர்ப்பு என்ன என்று பத்வாக்  கேட்கப்போவதாகவும் தகவல்கள் கசிகின்றன. மேலும் இஸ்லாமிய அகீதாவிற்கு முரணான கருத்தையுடைய இந்தத் தரீக்காவினர் சிலர் பெரிய பள்ளி நிர்வாகத்தில் இருப்பதாகவும் இவர்கள் தொடர்பில் சரியான இஸ்லாமியக் கருத்து என்ன என்று மக்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும் என்றும் ஒரு சிலர் கருத்துக்கொண்டுள்ளதாகவும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறிருப்பினும் சத்தியம் ஒரு நாளைக்கு வெளிவரும் என்பதும் பசுத்தோல் போர்த்திய புரோகிதப் புலிகளின் சொந்த முகங்கள் ஒரு நாள் எல்லோருக்கும் தெரியத்தான் போகிறது எனபதும் நிச்சம்.
“சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்” (அல்-குர்ஆன்)

4 comments:

Anonymous said...

Wait and See How Kadiriyya going to show their victry in three weeks time

By : Kadiriyyan

அப்துல் said...

வணக்கம் காதிரியன். வரிக்கு வரி நாயகம் நாயகம் என்று அந்த வேறுவள கோயில் வியபாரியை (கைதியை) அழைப்பதன் மூலம் ரஸூ ஸல்லல்லாஹ் அலைகி வஸல்லம் அவர்களுடைய முன்மாதிரியை அப்படியே உடைத்தெரிந்து விட்டு, கொஞ்சம் கூட சுய சிந்தனையே இல்லாமல் மக்கத்துக் காபிர்கள்போலவே உங்களது நடத்தைகளை மாற்றிக்கொண்டு தவிக்கும் இந்த காதிரியன், சாதுலியன், முஸ்தபீயன் இவர்களுக்கிடையிலும் குர்ஆன் பாடமா? மாசா அல்லாஹ் அல்லாஹ இந்த கூட்டங்களுக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.

பழைய காதிரியன் said...

அப்துல் சொல்வது சரிதான். தரீக்காக்களின் இறுதி அடைவு அலி றழியல்லாஹு அவர்களில் போய் முடிகிறது. இவைகளின் தோற்றுவாய் ஷீஆக்களே. மேலும் இந்தக் கலீபாவை சந்தித்த பிரதிநிதிகளிடம் ஆதாரமாக பேருவளையில் உள்ள ஒரு புத்தகத்தைக் காட்டினாராம். என்ன முட்டாள்தனம். ஆதாரம் காட்டுவது குர்ஆனிலிருந்து அல்லது ஹதீஸிலிருந்து. எப்போதான் இந்த தரீக்காச் சமூகம் அறிவுள்ளவர்களாக மாறுமோ என்பது இறைவனுக்குத்தான் தெரியும்....

Anonymous said...

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ என்று நாம் சாப்பிட்ட பின்னர் ஓதி வந்தோம். இப்போரு இந்த ஹதீஸ் ளஈப் என்று தவ்கீத் வாதிஹள் சொல்கிறார்கள். ஏன் அடிக்கடி இப்படி மாறுகிறது

Post a Comment