கிளை 06. புனை கதை
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
....................................................
புனை கதைகளுக்குப் பொய்களே அழகு சேர்க்கின்றன. பொய்யெனத் தெரிந்தும் நம்மில் எத்தனைபேர் எத்தனையோ புனைகதைக்குள் புதைந்து போயிருக்கிறார்கள்…? பொய்யானாலும் அதற்குள்ளிலுக்கும் ஒரு வகை ஈர்ப்புத்தான் இந்த மதிமயக்கத்திற்குக் காரணம். சில உண்மைகளும் புனைகதைகள் போல் கற்பனைகளாகியிருக்கின்றன. அதிலொன்றுதான் எங்கள் ஊருக்கு மைதானம் வரப்போகும் கதையாகும். தலைமுறை தலைமுறையாக வாய்களில்தான் அந்த மைதானத்தைக் காணக்கிடைக்கின்றது. உழைப்பதே சுமையாகிவிட்ட இன்றைய பொழுதுகளில் உறவுகளோடு ஒரு வார்த்தை பேச நேரமில்லாத போது இந்த மைதானத்தைப் பற்றி அரட்டையடிக்கவா எங்களுக்கு நேரம் கிடைக்கப் போகுது? பாவம் அந்தப் பிஞ்சுகள். தென்னம் தோப்பு, ரப்பர் தோட்டம் எல்லாம் அழிச்சு மீதமிருக்கும் சில சகதி வயல்கள்தான் அவர்களை விளையாட வைக்கின்றன. பாடசாலை மைதானத்திலும் எத்தனை பேர்தான் விளையாடுவது? தேய்ந்துபோன வண்டிச் சக்கரம் போல அந்த செம்மண் தரையில் ஓடி ஆடிய எங்கள் பாதங்களும் தேய்மானம் கண்டுவிட்டன. அகரம் சொல்லித் தந்த அந்தப் பள்ளிக் கூட மண்ணிண் தன்மை கொஞ்சம் கடுமைதான். ஆனாலும் அதில் விளையாடுவது எங்களுக்கு என்றென்றும் அருமைதான். போதும் எங்களுக்கு இதுவொன்றும் போதும். துள்ளி விளையாட எங்கள் பள்ளி மண்ணே போதும். எங்களைப் பொறுத்த மட்டில் அந்த மைதானக் கதை எங்களுக்குப் புடித்த ஒரு புனை கதைதான். அந்தக் கதையைச் சொன்னால் சம்பிரதாயத்திற்குக் கேட்போம், ஆனால் அதில் லயிக்க மாட்டோம். வாழ்க்கையே புனை கதையாகின்ற போது இதுவொன்றும் புதுமையல்ல.
2 comments:
புனை கதை சிறந்த பதிவு. ஒரு கணம் ஊரின் துயரம் கண்டு கண்கள் நனைந்தன. உள்ளமும் பாரமாகியது. சோகத்திலும் ஒரு சுகம். தொடர்க உங்கள் கிராமத்துத் தரிசன். தினம் காத்திருக்கிறேன் தரிசனத்துக்காய்..... இலக்கிய உள்ளங்களின் உள்ளங்கள் ஏன் இன்னும் திறக்கவில்லை
இவன்
ஊரான்
அஸ்ஸலாமு அழைக்கும்
எங்கள் பாடசாலை அபிவிருத்திசங்கம், நலன்புரிச்சங்கம் , பளைய்யமானவர்கள் இணைந்து பாடசாலை அபிவிருத்திக்கென சுமார் 500000 ரூபாய் கிடைத்தது இது முதல் முறை சேகரித்தபோதே, இரண்டாவதுமுறை சேகரித்தபோது கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என்று தெரியவில்லை. மொத்தமாக 800000 ரூபாய் பாடசாலக்கு கிடைத்தது .
சில பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் அந்த பணத்தில் சிலவற்றை கொம்மிஸ் முறையில் பாடசாலை அதிபரிடம் பெற்று இருப்பதாக தகவல்கள் சில னம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது முறையானத? எந்த தகைமைகளை வைத்துக்கொண்டு அவ்வாறு அவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது .
எனையா ஊர்மக்களுக்கும் அந்த பணத்தினை தொழிலுக்காக பெற்று கொம்மிச்முரைய்யில் பாவிக்கலாம் தானே.
இது உண்மை நிலவரம். ஊர்பலாய் அல்ல , ஊரின் பொதுச்சொத்து
தகுந்த இடத்தில் பொது கூட்டத்தில் அவற்றை சுட்டிக்காட்டுவேன்.
Post a Comment