கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திறந்த சிறைகள்

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்
.
..................................................................................................................................
நக்கலும் நகைப்புமாய் குத்தலும் முறைப்புமாய் அவர்கள் செல்கிறார்கள். பையிலொரு பேனாவும் கையிலொரு புத்தகமுமாய் வர்ணஜால கோலங்களில் படையெடுத்து அவர்கள் செல்கிறார்கள். எங்கு செல்கிறோம் எதற்காகச் செல்கிறோம் என்பதைவிட எப்படிச் செல்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு அவசியம் போலும். பள்ளிப்பருவம் புரியும் வினோத விந்தைகள் இவர்களை வானம்பாடிகளாக்கிவிட்டன. காணல் நீரில் மீன் பிடிப்பார்கள், தொடுவானில் சிறகடிப்பார்கள். இவார்கள்தான் பின்னேர வகுப்புக்குச் செல்லும் சில பிஞ்சுகள். கூலிக்கு மாரடிக்கும் சிலர் கொளுத்த பணம் பெருக்க மாலையில் வகுப்பு வைக்கிறார்களாம். அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கவே ஆயிரம் வகுப்பு வைக்கிறார்களாம். கல்வி முறையைக் குறை கூறுவதா? இவர்களைக் குறை கூறுவதா? யாரைத்தான் குறை கூறுவது. குறைகளை முறையாய் எடுத்துக் கூறுவதுதான் இன்றைக்குப் பெரும் குறையாய் போயிருக்கிறது. பாடங்களைப் படித்து முடிக்க பாடசாலையில் நேரம் போதாதாம். பாடத்திட்டம் போட்டவர்களுக்கு ஏன் இந்த நேரம் போதாமை தெரியாமற் போனதாம். போகிற போக்கில் இவர்கள் பச்சைத் தண்ணீரில் பலகாரமே பொரிப்பார்கள் போல.  நாப்பது நிமிடப் பாடத்தில் முக்கால் நேரம் அரட்டையில். எஞ்சிய பத்திலும் எதைத்தான் படிக்கலாம். மாலை வகுப்புக்கு வராதவர்களைப் பார்த்து மிரட்டல் வேற இவர்கள் விடுகிறார்களாம். யாரை ஏமாற்றுகிறார்கள். ஒரு சமூகத்தையல்லவா இவர்கள் ஏமாற்றுகிறார்கள். பிஞ்சுகளுக்கெல்லாம் வகுப்பு வைக்கும் இந்தக் கலாச்சாரம் மாற்றப்படல் வேண்டும். தாலாட்டுப் பாடிய வாய்களும் நிலாச்சோறூட்டிய கைகளும் தன் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து, லயித்து, கடைவாயில் எச்சிலைக் கூட துடைக்க மறந்த இந்தத் தாய்க்குலத்துக்கு தொலைந்து போகும் தம் பிள்ளையின் எதிர்காலம் என்றைக்குத்தான் நினைவில் வரப்போகுது? ஆனால் பரீட்சை முடிந்துவிட்டால் போதும். மக்கன், மடையன்……… ஒரு அகராதியையே வாசிப்பர்கள். பரிதாபம் இந்த இளசுகள். முளையிலேயே கருகிவிடுகிறார்கள். காலையானால் பாடசாலை, மாலையானால் ஒரு வகுப்பு, அது முடிந்ததும் இன்னொரு வகுப்பு. எதனைத்தான் படிப்பார்கள்? சிறைசெல்லாமலேயே சிறையை இவர்கள் தெரிந்துவிட்டார்கள். எங்களை யாருமே பரியமாட்டார்களா என்று நொந்துபோய்விட்டார்கள். இனியாவது இவர்களை யாராவது புரிந்து கொள்ளட்டும்!

13 comments:

ஊரான் said...

நல்ல கருத்து. தற்போது நமது பாடசாலையிலும் இரவு நேர வகுப்பு நடாத்துகிறார்கள். ஒரு ஆசிரியருக்கு ஒரு நாள் வகுப்பெடுத்தால் 400 ரூபா கொடுக்கப்படுகிறதாம். என்ன ஆசிரியர்களின் இரவுக் கொள்ளை. மஃறிபானால் வீடுகளில் இருக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஷைத்தான் வெளிவருவதாக ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெண்பிள்ளைகள் இந்த நேரத்தில் வெளியில் திரிவது உகந்ததல்ல. அல்லாஹ்தான் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். நமது இஸ்லாமிய வாதிகளுக்கு இந்தப்பாவம் தெரியவில்லை போலும்....

சகோதரி said...

சபாஷ் சபாஷ் தொடரட்டும் உங்கள் எழுத்து...
#கூலிக்கு மாரடிக்கும் சிலர் கொளுத்த பணம் பெருக்க மாலையில் வகுப்பு வைக்கிறார்களாம்.
#அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கவே ஆயிரம் வகுப்பு வைக்கிறார்களாம்.
#போகிற போக்கில் இவர்கள் பச்சைத் தண்ணீரில் பலகாரமே பொரிப்பார்கள் போல.
#....
#....

உள்ளங்கையில் நெல்லிக் கனிவைத்ததைப் போன்று சுவையான இலகிகிய நடையுடன் மிகத் தெளிவாக பல உண்மைகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பின் சகோதரர்களே,
இன்று எமது பாடசாலையில் சாதாரண தர மாணவர்களுக்கு இரவில் பாடசாலை நடாத்தி பாடத்திட்டங்களை முடித்து ஒரு நல்ல பெறுபேறு எடுப்பதற்காக அதிபர் உட்பட பல நலன்விரும்பிகள் முயட்சிக்கின்றனர் என்பது கவலைய்யானவிடயமாக உள்ளது,
இது முழுக்க முழுக்க ஆசிரியர்களின் தவறாகவே உள்ளது , அவர்கள் நேரத்துக்கு அவர்களது வேலைகளை செய்தால் இவ்வாறு மாணவர்களை அலட்டவேடியது இல்லை.
இவ்வாறு இரவுநேர பாடசாலை நடாத்துவதன் நோக்கத்தை பார்த்தால் உண்மையிலேயே மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கமாக கொண்டதாகவிலங்கவில்லை, மாறாக நல்ல பெறுபேறு எடுக்காவிட்டால் அதிபர் , ஆசிரியர்களுக்கு வெளியே தலைகாட்ட முடியாது போகும் என்பதற்காகவே.
எப்படியோ கஷ்டப்பட்டு சாதரனதரத்தில் நல்லபெருபேருகளை எடுத்துக்கொடுத்தாள் போதும் என்கின்ற நிலை உயர்தரம் பற்றி சிந்திப்பதே இல்லை.
சாதாரண தரத்துக்கு வேண்டியது வெறுமனே 3C , எனய்யவை S ஆக இருந்தாலும் போதும், ஆனால் உயர்தரத்தை எடுத்துக்கொண்டால் கட்டாயம் 3A வேண்டும் சிலவேளை அவ்வாறு இருந்தும் பல்கலைகழக பிரவேஷம் கிடைப்பது கடினம். அவ்வாறு பல்கலை கழக பிரவேஷம் இல்லாமல் போனால் ஷாதாரனதரத்தில் பைலாகினவனுக்கும், உயர்தரத்தில் பல்கலைகழகம் பிரவேஷம் கிடைக்காதவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
பணம் படைத்தவனாக இருந்தால் ஒன்றோ தனது குடும்ப வியாபர நடவடிக்கைகளில் ஈடுபடுவான் அல்லது அந்த பெருபெற்றைகொண்டு வேறு தனியார் படிப்புக்களை மேற்கொள்வான்.

ஒரு சாதாரண, ஏழை குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தால் அவன் உயர்தரத்தில் சித்திஎயதும் பல்கலைகழகம் கிடைக்காவிட்டால் அவனது இரண்டு வருட பாடசாலை வாழ்க்கை மண்ணாகவே இருக்கும். இவனுக்கும் சாதாரண தரத்தில் பைலானவனுக்கும் வித்தியாசம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிடும்.

நாம் கூடுதலான முக்கியத்துவத்தை கொடுக்கவேண்டியது உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கே, சாதாரண தரம் படிக்கும் மாணவர்களுக்காக இவ்வாறு இரவு நேர வகுப்பெல்லாம் வைத்து கஷ்டப்படுத்த தேவை இல்லை.

இன்று உயர்தர வர்த்தகம், கலை பிரிவு மாணவர்களுக்கு ஒழுங்கான ஆஷிரியர்மார்கள் இல்லை என்பது மிக முக்கியமான குறைபாடாக உள்ளது.

அப்பாடா எப்படியோ சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறு கிடைத்து விட்டது இனி யாரும் எமக்கெதிராக பேஷா மாட்டார்கள் என்பதற்கான அதிபர், ஆசிரியர்களது ஒரு கண்கட்டிவித்தைய்யகவே உள்ளது.

Anonymous said...

what brother has said here is 100 person t correct. After 1992 no boys have been selected to campus. What a pitty ! why they do these people not think about A/L pupils?

Anonymous said...

பாடசாலையின் கல்வி நிலை வீழ்ச்சிக்கு ஆசிரியர்கள்தான் முழுக் காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஓரிரு ஆசிரியர்கள் தான் ஒழுங்காக தமது கடமையைச் செய்கிறார்கள். அதிகமானவர்கள் எடுக்கின்ற சம்பளம் சுத்த ஹராம். ஆனால் இதைச் சுட்டிக் காட்டப் போனால் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. விசேஷம் என்னவெனில் ஆசிரியர்களின் குறையைச் சுட்டிக் காட்டுகின்ற பொது சிறப்பாக தமது கடமையைச் செய்பவர்கள் கோபப்படுவது தான் வியப்பானது. குறை சொல்லப்படுவது தவறு செய்பவர்களுக்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கூட இவர்களுக்கு இல்லை. இதனால் தவறுகளை நேரடியாக சுட்டிக் காட்டிய சிலர் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் நன்றாக கற்பிப்பவர்களும் மாணவர்களிடம் பழி வாங்குகின்ற நிலை ஏற்படுமோ என்பது.
இரவு நேர வகுப்புகளுக்கு 400 ரூபா என்பது கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய செய்தி.
பாடசாலை என்பது ஊரின் சொத்து. எழுத்தாளரும் ஏனையவர்களும் சொல்லியிருக்கின்ற கருத்தகள் 90 வீதத்துக்கும் மேல் உண்மையானாலும் பகிரங்கமாக பலமுறை களம் ஏற்படுத்தப்பட்டும் இக்கருத்துக்கள் மக்கள் முன் வைக்கப்படவில்லை. துணிந்து கருத்துச் சொன்ன சிலருக்கு இந்த 5 பேரின் ஆதரவு கிடைத்திருந்தாலே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். கருத்துச் சொன்னவர்களை வெளியில் இருந்து விமர்சிக்கின்றனர் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கின்ற படித்தவர்கள்?
எல்வாம் சரிவந்தால் காட்சிகளுக்கு ஆளில்லாமல் போகலாம் என்ற பயம். சில சில்லறைகளை நிறுத்தப் போவதாக மிரட்டல் வேறு.
விமர்சனங்களோடு தீர்வுகளும் தீர்வு காணத்துடிக்கின்றவர்களுக்கான ஆதரவு வழங்கும் தேவையையும் கவனத்தில் கொள்வது சிறந்தது.

Anonymous said...

ஒரு நாளைக்கு ஒரு மாணவனிடம் 20 ரூபா அறவிடப்படுகிறது. அதில் கற்பிக்கும் ஆசிரியருக்கு ரூபா.400 கொடுக்கப்படுகிறது. மீதியாக உள்ளதை கரட் பில், மேசை கதிரைகளை ஒழுங்குபடுததும் உதவியாளர் கொடுப்பணவு என்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. கவலையான விடயம் என்னவெனில் பாடசாலையில் கற்பிக்காத ஆசிரியர்களும் இரவு வகுப்பில் ஆர்வமுடன் கற்பிப்பதுதான்....!

Anonymous said...

அப்படி எப்படி வெட்கம் இல்லாமல் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களிடம் பணம் அறவிடுவது.

வீடுவீடாக போய் சேர்த்த 500,௦௦௦/= பணத்துக்கு என்ன நடந்தது

எந்தவித தகுதியும் இல்லாத பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் உள்ள வியாபாரிகளுக்கு பாடசாலை பணம் நன்றாக ஓடுதுபோல.

முஹிப்புல் ஹக் said...

இப்போதுள்ள பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலையின் நலனுக்கு பல வழிகளில் பாடுபடுகின்றது. எந்தவிதத் தகுதியுமில்லாத பாடசாலை அபிவிருத்திச் சங்க வியாபாரகள் என்று ஒருவா் கூறியிருப்பது கவலை தரும் விடயம். அவருக்குத் தகுதியிருந்தால் ஏன் முன்னுக்கு வந்து அபிவிருத்திச் சங்கத்தில் ஈடுபடுவதில்லை. பின்னால் ஒழிந்து கொண்டு கருத்துச் சொல்வதில் என்ன நடக்கப் போகுது. ” நாய் வைக்கோல் சாப்பிடுவதுமில்லை. சாப்பிடும் மாட்டை சாப்பிட விடுவதுமில்லை” இந்த கருத்துச் சொன் சகோதரரும் வைக்கோலில் உறங்கும் நாயைப் போன்றதுதான்.

kastovity said...

பாடசாலைப் பணத்தை வியாபாரிகளுக்கு கொடுத்திருப்பதாக இந்தத் தளத்திலும் வேறு சில தளங்களிலும் விமர்சனங்கள் செய்யப்பட்டிருந்தன. இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மட்டுமன்றி இந்த நபர் ஊரில் நடக்கின்ற எந்த விதமான விடயங்களையும் அறியாத அல்லது அறிய விரும்பாத ஒரு கேடி என்றே கூற வேண்டியிருக்கின்றது. இந்தப்பணம் சேகரிக்கப்பட்ட விதம் அதன் வரவு செலவு விபரம் என்பன 4 பள்ளிகளிலும் உரிய காலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சில பள்ளிகளில் அந்த கணக்கு விபரங்கள் மாதக் கணக்கில் தொங்க விடப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காடடப்பட வேண்டும்.
ஆந்த நேரத்தில் விமர்சனம் செய்திருக்கலாம் அல்லது விளக்கம் கேட்டிருக்கலாம். நாம் அறிந்த வகையில் சேகரிக்கப்பட்ட பணத்தை விடவும் கூடுதலான சேவை பாடசாலைக்கு சேவை நடக்கிறது. பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களுக்கான சம்பளம் இந்தப்பணத்தை முதலீடு செய்து பெற்றுக் கொண்ட பணத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
சேகரிக்கப்பட்ட மொத்தப்பணத்தில் குறிப்படத்தக்க பெரிய தொகையை மீதம் வைத்துக் கொண்டு மாதாந்தம் 5 தொண்டர் ஆசிரியர்களுக்கு சம்ளம் வழங்குவது குற்றமா
அவ்வாறு செய்வது தவறென்றால் அதற்கு இவரது அப்பன் பணம் கொடுப்பானா

Anonymous said...

உண்மையில் எமது ஊரில் உள்ள சிலர் பாடசாலை சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுவதில்லை, ஈடுபடுபவர்களுக்கு அதனை செய்துகொண்டு போவதற்கான உதவிகளை வலன்குவதும் இல்லை. அனால் இங்கு ஒருவர் பாடசாலை பணத்தை அபிவிடுத்தி சங்க உறுப்பினர்கள் எடுத்து வியாபாரம் நடத்துவதாக சொல்லி இருப்பது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல அப்படிஎன்றால் அதனை அவர் ஆதாரபூர்வமாக நிரூபிப்பது கடமை. அதேபோன்று எமது பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்களது கூட்டங்கள் சிலரது வீடுகளில் கூடாமல் பாடசாலை வளாகத்தில் , குறைந்தது 2 வருடங்களுக்கு ஒருமுறையாவது ஊர்மக்கள் அனைவரையும் கூட்டி ஆலோசனைகளை பரிமாரிக்கொல்லுமாக இருந்தால் மிகவும் நல்லம், ஏனென்றால் தற்கால S .D .S இல் பணமும் அதிகமாக சம்பந்தப்படுவதனால்.
எங்கு இனிப்பு உண்டோ அங்கு எறும்புகள் நிறையும், அதேபோல் எங்கு பணம் அதிகமாக உண்டோ அங்கு களவு, உள்ளடி போன்ற சைத்தானின் விளையாட்டு ஆரம்பிக்கும். இதுவே இன்று எமது நாட்டில் உள்ள அரசியல் சமூக சேவை அமைப்புக்களிலும் நடக்கிறது.

யாராவது யார்மீதுசரி குற்றம் சுமத்துவதானால் அதனை ஆதாரத்துடன் உரிய அமைப்பில் கொடுப்பது சிறந்தது , யாருக்கும் பயப்பட தேவை இல்லை இது எமது ஊர், எமது பாடசாலை நாளை எமது குழந்தைகளும் இதற்கே வரவேண்டும்.

Anonymous said...

யார் இது இந்த முஹிப்புல் ஹாக்
நாய், வைக்கோல், மாடு என்றெல்லாம் சொல்பவர்.
சில மாடுகள் நாய் படுத்த, பேன்ட வைக்கோலை எல்லாம் உண்ணுகிறது இவருக்கு தெரியபோல, வட்டிக்கு பணம் சம்பாதிக்கும் சில மாடுகள் ஊர்மக்களின் பணத்தை என்னென்ன வியாபாரத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது , பாவம் இவரே அவர்களை மாடு என்று சொல்லுவது சரி தான். இவர்கள் நாய் படுத்தவைக்கோள் மாத்திரம் அல்லாது நாய் பேன்ட வைக்கொளைக்கூட சாப்பிடும் வியாபார மாடுகள் என்றே தெரிகிறது.

kastovity என்பவர் ஒருவேளை தொண்டர் ஆசிரியராக வேலைசைபவர் போல, எத்தனை தொண்டர் ஆசிரியர் போட்டும் கடந்தவருட சாதாரணதர பெறுபேறு என்ன நடந்தது என்று இவருக்கு தெரியாபோல, அதோடு தொண்டர் ஆசிரியர்கள் படித்துக்கொடுத்தும் பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் இரவுநேர வகுப்பு நடத்துவது என்றால் தொண்டர் ஆசிரியருக்கு கொடுக்கும் பணத்துக்கு என்ன அர்த்தம் என்று தான் தெரியவில்லை,
சிலவேளை இரவுநேர வகுப்புக்களை தொண்டர் ஆசிரியர்களும் படித்துக்கொடுத்து அதற்கும் வேறாக பணம் எடுக்கிறாங்களோ தெரியா, அப்படி பணம் எடுப்பது என்றால் சிலவேளை kastovity என்பவரின் அப்பன் பணம் கொடுக்கிறார் போல.

Anonymous said...

யார் இது இந்த முஹிப்புல் ஹாக்
நாய், வைக்கோல், மாடு என்றெல்லாம் சொல்பவர்.
சில மாடுகள் நாய் படுத்த, பேன்ட வைக்கோலை எல்லாம் உண்ணுகிறது இவருக்கு தெரியபோல, வட்டிக்கு பணம் சம்பாதிக்கும் சில மாடுகள் ஊர்மக்களின் பணத்தை என்னென்ன வியாபாரத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது , பாவம் இவரே அவர்களை மாடு என்று சொல்லுவது சரி தான். இவர்கள் நாய் படுத்தவைக்கோள் மாத்திரம் அல்லாது நாய் பேன்ட வைக்கொளைக்கூட சாப்பிடும் வியாபார மாடுகள் என்றே தெரிகிறது.

kastovity என்பவர் ஒருவேளை தொண்டர் ஆசிரியராக வேலைசைபவர் போல, எத்தனை தொண்டர் ஆசிரியர் போட்டும் கடந்தவருட சாதாரணதர பெறுபேறு என்ன நடந்தது என்று இவருக்கு தெரியாபோல, அதோடு தொண்டர் ஆசிரியர்கள் படித்துக்கொடுத்தும் பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் இரவுநேர வகுப்பு நடத்துவது என்றால் தொண்டர் ஆசிரியருக்கு கொடுக்கும் பணத்துக்கு என்ன அர்த்தம் என்று தான் தெரியவில்லை,
சிலவேளை இரவுநேர வகுப்புக்களை தொண்டர் ஆசிரியர்களும் படித்துக்கொடுத்து அதற்கும் வேறாக பணம் எடுக்கிறாங்களோ தெரியா, அப்படி பணம் எடுப்பது என்றால் சிலவேளை kastovity என்பவரின் அப்பன் பணம் கொடுக்கிறார் போல.

Anonymous said...

என்ன பொலக்கர்ஸ் இலக்கியம் அலுப்புத் தட்டிவிட்டதா..?

Post a Comment