கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அனோமாவின் தாயார் மரணம் : இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சரத்துக்கு அனுமதி


அனோமா பொன்சேகாவின் தாயார் இன்று மரணமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ளது.


அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அனோமா பொன்சேகாவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2 comments:

Anonymous said...

சமீப காலமாக இத்தளம் ஏனைய தளங்களின் செய்திகளை அப்படியே
தாங்களின் செய்திபோல் பிரசுரிப்பதை காணமுடிகிறது.
ஊடக தர்மம், நடுநிலை பற்றி நாளுக்கொருமுறை கருத்து வெளியிடும் உங்களுக்கு
இது எந்த வகை தர்மம் என்று புரியவில்லையா?
குறைந்தது நன்றி: வீரகேசரி என்றாவது குறிப்பிடலாமே...
ஏன் இந்த மின்னிலக்கிய திருட்டு?
ஷெலூபீன்,
கத்தர்.

Anonymous said...

I agreed...

mohamed
qatar

Post a Comment