பரிதாப நிலையில் நமது பாடசாலை (தொடர் பாகம் 02)
92 இற்குப் பின்னரிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு ஆண் மாணவர் எவரும் எமது பாடசாலையிலிருந்து பலகலை செல்லவில்லை
ஒரே தடவையில் 11 பேர் பல்கலை சென்ற பெருமை நமது பாடசாலைக்குண்டு. ஆனால் இரு தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் இன்றுவரை அது போன்ற உயர் பெறுமானமொன்றை பாடசாலை பெறவில்லை என்பது மனவருத்தத்துக்குறியதாகும். உயர்தரமாயினும் சாதாரணதரமாயினும் மாணவிகளின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கின்றது. ஆனால் இதுவும் தற்போது கேள்விக்குறியாகவுள்ளது. இந்த அசமந்த நிலைக்கு எனக்கு காரணம் என்பது தொடர்பாக யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்வதாகக்கூட தெரியவில்லை. இது பாடசாலை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தெனலாம்.
பாடசாலையின் உயர்தரப் பிரிவு மூடுவிழாக் காணும் அபாயம்
உயர்தரப் பிரிவிற்கு உரிய ஆசிரியர்கள் இல்லாமையினால் கலைத்துறையில் படிக்கும் மாணவர்கள் கூட வெளியூர்களிற்குப் போகும் நிலயேற்பட்டிருக்கின்றது. உயர்தர வகுப்பு மாணவர்கள் கூட பாடசாலை நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவதையும் அவதானிக்க முடிகிறது. கலைப்பிரிவிலும் வனிகப்பிரிவிலும் எமது பாடசாலையில் கற்க வேண்டிய திறமையான பல மாணவர்கள் தற்போது வெளியிடங்களிலேயே தமது படிப்பைத் தொடருகின்றார்கள். உயர்தரப் பிரிவு பாடசாலையில் இருக்கின்றது என்று பேருக்காவது இருந்த கலைப்பிரிவும் ஆட்டம் காணலாம் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்நிலை தொடருமாயின் மகாவித்தியாலய தரத்திலிருந்து வித்தியாலயத்தரத்திற்கு பாடசாலை தரம் குறைக்கப்படலாமென்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த அசாதாரண நிலையை மாற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அதிபரின் கரங்களைப் பலப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்.
பத்ரியாவா பாலிகாவா..?
அல்பத்ரியா கல்வித்துறையில் ஆட்டம் கண்டகொண்டிருக்கும் இந்தத் தருவாயில் சிலர் பத்ரியாவா பாலிகாவா சிறந்தது எனக் கணக்குப் போட்டுத் திரிவதாகக் கூறப்படுகின்றது. பத்ரியாவைப் பிடிக்காதவர்கள் பாலிகாவையும், பாலிகாவைப் பிடிக்காதவர்கள் பத்ரியாவையும் தலையில் தூக்கிப் பேசுவது வழமையானதே. சிறு பிள்ளைத் தனமான இதுபோன்ற சிந்தனைகள்தான் இரு பாடசாலைகளையும் குட்டிச் சுவராக்கப் பார்க்கின்றன. இரண்டுமே நமதூரின் பாடசாலைகள்தான். இரண்டிலுமே இந்த மண்ணின் பிள்ளைகள்தான் கல்வி கற்கின்றார்கள். ஆகவே ஒன்று வீழ்ந்து ஒன்று எழுவதானது ஒரு பிள்ளை படித்து மறு பிள்ளை படிக்காமல் போதல் என்பது போன்றதாகும். இரண்டையும் கண்களாய்க் காத்து வளர்ப்பது இந்த ஊரின் சொந்தங்களனைவரினதும் தலையாய கடமையாகும். இவ்வாறு சிந்திப்பவர்களே நமதூருக்கு என்றைக்கும் தேவைப்படுகின்றனர். பாடசாலையொன்று எங்களுக்குக் கிடைக்காதா என்று பலர் ஏங்கும் பொழுதில் இப்பாடசாலைகள் இரண்டும் நமதூருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெறும் சொத்தாகும். எனவே அதிகாரத்தையும் வரட்டு கௌரவத்தையும் தூக்கி வீசிவிட்டு எதிர்கால மாணவ சமூகம் ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்தோராக ஆவன செய்ய அணிதிரள்வோம்!

11 comments:
சிறந்த பதிவு. பாடசாலையின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. சகலரும் ஒன்றினைந்து காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு பாடசாலையை முன்னேற்றல் வேண்டும்.
கவலையான விடயம், தேவையான சந்தர்ப்பத்தில் உங்களது கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள். நன்றி. அல்பத்திரியாவின் முன்னைய நிகழ்வுகளை சற்று ஞாபகபடுத்திப் பார்க்கும் போது பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கலாம். இப்பொழுது பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பாடம் நடப்பதில்லை என்று கவலைப்படும் நீங்கள் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஒரு ஆசிரியரை (Boosary Sir) பலவந்தமாக நீக்கியபோது ஏன் அமைதிகாத்தீர்கள்.
-ரகான்
ஒரு சிலரின் ஊதுகுழலாக மாறிவரும் நம் பாடசாலை
பாடசாலையின் இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு சிலர் நற்பணி செய்வதாகக் கூறி பாடசாலையில் மூக்கை நுழைத்திருப்பதாக ஒரு சிலர் குற்றம் சாட்டப்பட்டியிருக்கிறார்கள். பாடசாலைக்கு நேரத்திற்கு வரப்பிந்தும் சில மாணவர்களைக் கேட்டால் குறித் ஒரு இயக்கத்தின் வகுப்புக்குச் சென்றதால் நேரத்திற்கு வரத்தவறியதாக காரணம் கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளை மாணவர்கள் செய்யாது வருவதாகவும் அதற்குறிய காரணத்தை கேட்டால்; இரவு நேரத்;தில் மாணவர்கள் வேறு வேறு வகுப்புக்களுக்குச் சென்றதாகவும் காரணம் கூறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எங்கு போய் முடியுமோவென்று அஞ்சப்படுகின்றது. இவ்வாறு மேலதிக வகுப்புக்களை நடாத்துவோர் பாடசாலை பாட விடயங்களில் மாணவர்கள் கவனம் எடுக்க வேண்டுமென்பதை வழியுறுத்துவது கட்டாயமாகும். பாடசாலை ஒரு பொது நிறுவனமாகும். குறித்த சிலர் தமது சொந்த நடவடிக்கைகளுக்கு அதைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் ஏற்க முடியாது.
அஸ்ஸலாமு அழைக்கும்,
எமது பாடசாலையின் கல்விநிலையின் வீழ்ச்சிக்கு நிரய்யக்காரனம்கள் உண்டு.
நாம் இன்று YEஹூடி நசாராக்களின் திட்டத்துக்கு எமது முஸ்லிம் பாடசாலைகள் மாட்டிக்கொண்டு உள்ளமை உண்மையில் கவலையாக உள்ளாது அதை எப்படித்தான் தீர்ப்பது ?
கல்வித்திட்டம் : தமிழ் பாடத்தை எடுத்துக்கொண்டால் நிறைய காதல் காவியங்கள் , பாடல்கள், பெண்களை அணு அணுவாக வர்ணித்தல் ., இவைகளை படித்து , மனப்பாடமாக்கினால்தான் O/L பாச் பன்னமுடியும்(இவற்றையெல்லாம் படித்துக்கொடுத்துவிட்டு நமது பிள்ளய்கள் காதல் பண்றாங்களே என்று கண்ணீர்வடிப்பது).
கணிதப்பாடத்தை எடுத்தால் வட்டி. வட்டியினை கணக்கிடுவது.
விஞ்ஜானத்தை எடுத்துக்கொண்டால் மனிதன் குரங்கில் இருந்துவந்தது என்று எழுதினால் தான் வைத்தியர் ஆகமுடியும்( விஞ்சான விளக்கங்கள்)
ஆண்கிலப்பாடத்தை எடுத்தால் backstreetboys , titanic போன்ற பாடல்களை படிக்கவேண்டும்.
இவ்வாறான பல சிக்கல்களில் எமது முஸ்லிம் பாடசாலைகள் மார்க்கத்தைவிட்டும் தவிர்ந்தநிலையில் நமது கல்வியினை தேடிக்கொள்ளவேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது.
சிலவேளைகளில் மார்க்கமா , கல்வியா என்கின்ற நிலை சூல்நிளைவரும்போது நிரய்யப்பேர் கல்வியினைத்தான் தேர்ந்து எடுப்பதோடு ( ஹசரத் சொல்றமாதிரிஎல்லாம் பார்க்கப்போன இன்றக்கி அவ்வளவுதான் எண்டு கூடசொல்வார்கள்.) ஐயோ லுகர்தொளுகைதான வீட்டுக்குப்போய் பிறகு தொலமுடயும் , என்கிற நிலைகூட உருவாகிஉள்ளது.
***.இன்று எமது பாடசாலைகளில் உள்ள கல்வித்திட்டம்கள் எம்மை இஸ்லாம் என்ற மார்க்கத்தை விட்டு வெளியே தள்ளும் அமைப்பினாலான முறைகளிலேயே அமைந்துள்ளது.
இன்று நாம் குரானுக்கு, தொழுகைக்கு கொடுக்கின்ற முக்கியத்தன்மய்யினை விட கூடுதலான முக்கியத்துவத்தினை இந்த இஸ்லாமியரின் மூளைகளை சலவைசெய்யக்கூடிய இந்த கல்வித்திட்டத்துக்கு கொடுக்கிறோம். அவ்வாறு இல்லை என்றால்
இன்று லுகருக்கு, அசாருக்கு அதான் சொல்லும்போது டியூஷனை விட்டு விட்டு பள்ளிக்கு ஓடவேண்டு., காதல் கதைகள், அதில்வரும் பாடல்களை மனனம் சைய்வதைவிட்டு குராநினை மனனம் சய்யவேண்டும்.
இன்று எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டு இருக்கிறது .
பிரதரினது கருத்து சற்று சிந்தனையைத் தூண்டுகிறது. ஆனால் அவர் சுற்றிக்காட்டிய விடயங்களைத்தான் நாமும் 10-20 வருடங்களுக்கு முன்பும் படித்தோம் அப்பொழுது இந்த அளவுக்கு நமது மாணவர்களின் ஒழுக்க சீர்கேட்டைக் காணமுடியவில்லை. பிரதர் சொன்னவிடயங்களோடு நவீன மீடியாக்களின் தாங்கங்களைக் கட்டுப்படுத்த நமது சமூகம் வழிகாட்டப்பட வேண்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
brother அவர்கள் கூறியதுபோல எமது கல்வியானது, மார்க்கத்துடன் அமைய வேண்டுமென்றால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?? அரசியல் திட்டங்கள் மாறவேண்டும்.... திருமறை நாடாலவேண்டும்... இன்று, எமதரசியல்வாதிகளில் யார் குர்'ஆண் ஹதீஸ் பேசுகிறார்கள்?? நாம் முயற்சித்தால் அல்லாஹ் எல்லாவற்றையும் மாற்றித்தருவான்... சகோதரர்களே! எமது வாழ்க்கையே ஒரு அமல். நம் மக்கள் மனதில், தொழுகை, ஹஜ், சகாத், நோன்பு, போன்றவை மட்டுமே அமல்களாக தெரிகின்றன. அதனால்தான் அவற்றிலே இன்னும் பிளவு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றனர். கொஞ்சம் பரவலாக யோசியுங்கள்.... நாம் எமக்குரிய சூழலை ஏற்படுத்தினால், மட்டுமே எமக்கு, முஸ்லிமாக வாழ முடியும். நம்மால் எப்படி மாற்ற முடியும் என்று சிந்தியுங்கள். அதைத்தான் நானும் சிந்திக்கிறேன். அல்லாஹ் எமக்கு வழி காட்டுவான்... பயமின்மையாலும், ஒரு கட்டுப்பாடு இன்மையாலுமே புகைத்தல், மது அருந்தல், விபச்சாரம், பொய், களவு, பொறாமை . ...... போன்ற பாவங்களை செய்கின்றனர். இஸ்லாமிய அரசியலை நினைத்துப்பாருங்கள், (நபிகளாரின் வாழ்க்கையை , அவர் நண்பர்களது வரலாறுகளை கவனியுங்கள்) மனதுக்கு நிம்மதியான அமைப்பில் வாழ்ந்தார்கள். காரணம், இஸ்லாமிய அரசியலை அவர்கள் உருவாக்கினார்கள் ( அல்லாஹ் அருள் புரிந்தான்). இலக்கை அடைய பாடு படுங்கள், அதை அடைய முயற்சித்த கூலியை அல்லாஹ் தருவான்.
கல்வித்திட்டம் மாறும்.
மனப்பாங்கு மாறும்.
பிரச்சனைகள் தீரும்.
பிடிவாதங்கள் அழியும்.
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முயற்சியுங்கள்.
சகோ. brother சொன்ன இந்த பந்தியை கவனியுங்கள்.....
சிலவேளைகளில் மார்க்கமா , கல்வியா என்கின்ற நிலை சூல்நிளைவரும்போது நிரய்யப்பேர் கல்வியினைத்தான் தேர்ந்து எடுப்பதோடு
( ஹசரத் சொல்றமாதிரிஎல்லாம் பார்க்கப்போன இன்றக்கி அவ்வளவுதான் எண்டு கூடசொல்வார்கள்.) ஐயோ லுகர்தொளுகைதான வீட்டுக்குப்போய் பிறகு தொலமுடயும் , என்கிற நிலைகூட உருவாகிஉள்ளது.
அது சரி உஸ்கூல்ல இப்படியெல்லாம் நடக்கிஅ என்டு நீங்க எழுதப்போய்த்தான் எங்களுக்கெள்லாம் தெரியும். அப்போ ஊரில நடக்கிஅ நன்பணி மன்றக் கிலாஸ், ஏ டு இதட் கிலாஸ், டிஏ தர்பியா கிலாசெல்லாம் என்ன செய்தோ தெரியா?
அன்பின் சகோதரனுக்கு,
பாடசாலை பற்றிய கவலையும் இஸ்லாமிய அறிவுரைகளையும் கருத்துக்களாக சொல்லியிருக்கிறீர்கள். அல் ஹம்டுளில்லாஹ். இஸ்லாம் ஓர் முழுமையான மார்க்கம் என்று வாயால் பேசினாலும் அதை இன்னும் எமது வாழ்க்கையின் சில நேரங்களில்தான் வணக்கமாக நினைப்பதுதான் உண்மை நிலை. பா.அ.சங்கத்திலுள்ள சிலர் திட்டமிட்டுத்தான் அந்த ஆசிரியரை வெளியேற்றியிருப்பது உண்மையான உண்மையாகும். தனது சொந்த இலாபங்களுக்காக ஒரு திறமை வாய்ந்த ஆசிரியரை வெளியேற்றியதன் ஒரு விளைவாக கூட இதை சொல்லலாம். இன்னும் சில திறமையான ஆசிரியர்கள் பலிகவுக்கு கூட இடம் மாறியுள்ளார்கள். பாடசாலையில் படித்துக் கொடுக்கின்ற ஆசிரியர்களே மாலை வகுப்பிகளை நடாத்துகிறார்கள். இவை எல்லாமே சேவை என்பது சொன்னால் என்ன நியாயம். எல்லாம் தொழிலாகவே போயுள்ளது. ஒரு காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் நிறைந்து வழிந்த போது அவர்கள் செய்த சேவைகளில் கொஞ்சமாவது இந்த மாலை வகுப்புகளை நடத்தி பிழைக்கின்ற ஆசிரியர்களிடம் இருக்கா? அப்போது கொடிகட்டி பறந்த பாடசாலை இன்று ஊர் ஆசிரியர்களின் கைக்குள் போனதால் 'தன் கைகளால் தனக்கே நாசம்' என்பது போல் இந்த கவலை நிலையில் தள்ளாடுகிறது. அதுவும் படித்த முஸ்லிம்(?) ஆசிரியர்கள்..
தனது ரப்பு அந்த கொடுமையான மறுமை நாளில், தனக்கு கொடுத்த அறிவை பயன்படுத்திய விதத்தை பற்றி கேட்பானே.. என்ன அன்பார்ந்த ஆசிரியர்களே தயாரா?
-முஹம்மத்-
ஒரு சிலரின் ஊதுகுழலாக பாடசாலை மாறிவருவதாக ஒருவர் கூறியிருக்கிறார். சரியான கருத்து. பாடசாலையிலிருந்து தரமான ஒரு ஆசிரியர் வெளியேற்றப்பட இந்த ஊதுகுழலின் ஒரு சில்லு மிக முக்கியமான ஒரு பங்கினை வகித்துள்ளது. தமது தாளங்களிற்கு ஏற்றபோல் ஆடாத இவரை பொய்க்குற்றச் சாட்டுகளை சுமத்தி விரட்டியதன் விளைவை இப்போது பாடசாலை அனுபவிக்கிறது. இனிமேலாவது செயலாற்றுவார்களா..?
அன்புள்ள ஆசிரியருக்கு , நாம் எழுதும் சில உண்மைகளை ஏன் நீங்கள் பப்ளிஷ் பண்ணுவதில்லை. தயவு செய்து இதையாவது பப்ளிஷ் பன்னுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
தயவு செய்து கருத்துக்களை பதிபவர்கள் தனிப்பட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் உங்களது கருத்துக்களை தாராளமாக எழுதலாம்.
Post a Comment